For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முக்கிய போட்டியில் choke ஆகும் ஆர்சிபி.. ஐபிஎல் தொடரில் ஆர்சிபியின் பரிதாபங்கள்

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் முக்கிய ஆட்டங்களில் சொதப்பும் வரலாறு ஆர்சிபி அணிக்கு நிறையவே உள்ளது.

சர்வதேச போட்டிகளில் தென்னாப்பிரிக்கா எப்படி முக்கிய ஆட்டங்களில் சொதப்புமோ அதேமாதிரி ஆர்சிபி அணியும் ஐபிஎல் பிளே ஆப்பில் சொதப்பி விடும் .

ஆர்சிபி அணி இதுவரை ஆறுமுறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது இதில் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை.

ஐபிஎல் எலிமினேட்டர் - ஆட்டத்தையே மாற்றக் கூடிய 5 வீரர்கள்.. இன்றைய ஆட்டத்தில் ஜொலிக்க வாய்ப்புஐபிஎல் எலிமினேட்டர் - ஆட்டத்தையே மாற்றக் கூடிய 5 வீரர்கள்.. இன்றைய ஆட்டத்தில் ஜொலிக்க வாய்ப்பு

 கை நழுவிய வாய்ப்பு

கை நழுவிய வாய்ப்பு

ஈ சாலா கப் நம்தே என்று எப்போது, அந்த அணி சொல்ல தொடங்கியதோ, அப்போது ஆரம்பித்தது அந்த துரதிர்ஷ்டம். 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை வந்த ஆர்சிபி டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம் choke ஆகி தோல்வியைத் தழுவியது. இதேபோன்று 2010ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு வந்த ஆர்சிபி இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாமல் வெளியேறியது.

 சென்னையிடம் தோல்வி

சென்னையிடம் தோல்வி

2011 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதிய ஆர்சிபி, மீண்டும் choke ஆகி தோல்வியை தழுவியது. அதன் பிறகு அடுத்த நான்கு சீசன்களில் ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு வரவில்லை. இதனையடுத்து 2015ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு ஆர்சிபி வந்தது. ஆனால் அப்போதும் இறுதிப்போட்டிக்கு போகவில்லை.

 முத்தான வாய்ப்பு

முத்தான வாய்ப்பு

இதன்பின்னர் 2016ஆம் ஆண்டு விராட் கோலியின் அதிரடியால் ஆர்சிபி இறுதிப் போட்டி வரை வந்தது. ஆனால் ஐதராபாத் அணியிடம் தோல்வியை தழுவியது. அந்த ஆண்டு கிடைத்த அருமையான வாய்ப்பை கோட்டைவிட்டது ஆர்சிபி. இதனையடுத்து மூன்று சீசன்களில் ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவே இல்லை.பின்னர் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றில் 4வது அணியாக தகுதி பெற்றது.

 மீண்டும் வெளியேற்றம்

மீண்டும் வெளியேற்றம்

ஆனால் அப்போதும் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாமல் போனது. இதனால் தனது கேப்டன் பதவியை கோலி ராஜினாமா செய்தார். தற்போது 2022ஆம் சீசனிலும் ஆர்சிபி பிளே ஆப் சுற்றில் விளையாடுகிறது. இந்த முறையாவது பைனலுக்கு செல்லுமா, இல்லை பிளே ஆப் சுற்றில் மீண்டும் choke ஆகி வெளியேறிவிடுமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஐபிஎல் தொடரில் இதுவரை நான்காவது இடம் பிடித்த அணி கோப்பையை வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 25, 2022, 18:24 [IST]
Other articles published on May 25, 2022
English summary
IPL Eliminator- History shows RCB is Known for Chokes in Big Games முக்கிய போட்டியில் choke ஆகும் ஆர்சிபி.. ஐபிஎல் தொடரில் ஆர்சிபியின் பரிதாபங்கள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X