"கர்ஜித்த சிங்கங்கள்".. சொல்லி சொல்லி அடித்த தோனி.. 4வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்றது சிஎஸ்கே!

அமீரகம்: கொல்கத்தா அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

டி20 உலக கோப்பைக்கு இந்த 8 ஐபிஎல் நட்சத்திரங்கள்.. பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. பலன் தருமாடி20 உலக கோப்பைக்கு இந்த 8 ஐபிஎல் நட்சத்திரங்கள்.. பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. பலன் தருமா

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் சேர்த்தது.

கடின இலக்கு

கடின இலக்கு

சென்னை அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். ருதுராஜ் கெயிக்வாட் காட்டிய அதிரடியால் சிஎஸ்கே அணி முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் சேர்த்தது. கெயிக்வாட் 32 ரன்கள், டூப்ளசிஸ் 86 ரன்கள், உத்தப்பா 31 ரன்கள், மொயீன் அலி 37 ரன்கள் என அடுத்தடுத்து அதிரடி காட்ட சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்தது.

உதவிய தோனி ப்ளான்

உதவிய தோனி ப்ளான்

இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஜோடி ஆகியோர் எதிர்பார்த்தபடியே அதிரடியான தொடக்கம் கொடுத்தனர். வெங்கடேஷ் ஐயர் ரன் ஏதும் அடிக்காத நிலையில் கேட்ச் கொடுத்தார். ஆனால் அதனை தோனி தவறவிட்டார். அது சிஎஸ்கே அணிக்கே பெரும் பிரச்னையாக உருவானது.

பிரமாண்ட தொடக்கம்

பிரமாண்ட தொடக்கம்

அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர்க்ஷ் 32 பந்துகளில் 50 ரன்களும், சுப்மன் கில் 43 பந்துகளில் 51 ரன்களும் விளாசி அசத்தினார். இதனால் முதல் விக்கெட்டிற்கு கொல்கத்தா அணி 91 ரன்கள் சேர்த்தது. ஆனால் அதன் பிறகு ஆட்டத்தை சிஎஸ்கேவின் பக்கம் திருப்பினர் தோனி. 90 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த கொல்கத்தா அணி 125 ரன்களுக்குள் 8 விக்கெட்களை இழந்து பரிதாபமான நிலைக்கு சென்றது.

அபார வெற்றி

அபார வெற்றி

முதல் விக்கெட்டிகிற்கு பிறகு வந்த வீரர்களில் ஒருவர் கூட பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. நிதிஷ் ராணா (0), சுனில் நரேன் (2), இயான் மோர்கன் (4), தினேஷ் கார்த்திக் (9), சகிப் அல் ஹசன் (0), ராகுல் திரிபாதி (2) என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு அந்த அணியால் 165 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்று 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

கடும் பதிலடி

கடும் பதிலடி

கடந்தாண்டு ப்ளே ஆஃப் வரை கூட முன்னேறாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்தாண்டு முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி 4வது முறையாக கோப்பையை வென்று கம்பேக் கொடுத்துள்ளது. தோனியின் மீதான விமர்சனங்களுக்கும் கடும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
CSK beats KKR by 27 runs and won the IPL trophy for 4th time in IPL Final 2021
Story first published: Friday, October 15, 2021, 23:40 [IST]
Other articles published on Oct 15, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X