ஐபிஎல் இறுதிப்போட்டியில் பிரதமர் பங்கேற்பு.. அகமதாபாத்தில் குவிந்த போலீசார்..அதுவும் எப்படி தெரியுமா

அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டிக்காக அகமதாபாத் நகரம் முழுக்க திடீரென கடல் போன்று போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 26ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

பட்லரின் ருத்ர தாண்டவம்.. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு சென்றது ராஜஸ்தான் அணி.. ஆர்சிபி தோற்றது எப்படி?? பட்லரின் ருத்ர தாண்டவம்.. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு சென்றது ராஜஸ்தான் அணி.. ஆர்சிபி தோற்றது எப்படி??

ஐபிஎல் இறுதிச்சுற்று

ஐபிஎல் இறுதிச்சுற்று

இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் போட்டியை கண்டு ரசிக்கவுள்ளனர். இதற்கான டிக்கெட் விற்பனைகள் நடந்து முடிந்து இறுதிகட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

பிரதமர் பங்கேற்பு

பிரதமர் பங்கேற்பு

இந்நிலையில் இன்று திடீரென அகமதாபாத் நகரம் முழுவதுமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்கவுள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 17 டிஜிபி, 4 டிஐஜி, 28 ஏசிபி, 51 இன்ஸ்பெக்டர்கள், 268 சப் இன்ஸ்பெக்டர்கள், 5000 காவலர்கள் மற்றும் 1000 துணை படை என குவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்பு

ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்பு

இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, நிறைவு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் கலக்கவுள்ளனர். இதுமட்டுமல்லாமல் ஹாலிவுட் பிரபலங்களும் இறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

வெற்றி யாருக்கு?

வெற்றி யாருக்கு?

இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது கணிக்க முடியாத அளவிற்கு கடினமாக உள்ளது. ஏனென்றால் குஜராத் அணி தொடர் வெற்றிகளுடன் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. ராஜஸ்தான் அணி குவாலிஃபையர் ஒன்றில் தோல்வியடைந்தாலும், மீண்டும் அட்டகாசமான கம்பேக் கொடுத்துள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
PM Modi & Amit Shah attend GT vs RR IPL Final ( ஐபிஎல் இறுதிப்போட்டியில் பிரதமர் மோடி & அமித்ஷா பங்கேற்பு ) குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
Story first published: Saturday, May 28, 2022, 20:50 [IST]
Other articles published on May 28, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X