இவ்வளவு பிரமாண்டமா.. ஐபிஎல் இறுதிப்போட்டி நேரம் மாற்றம்.. கலை நிகழ்ச்சிகளின் நேரம் என்ன- முழு விவரம்

அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டியில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது என்ற முழு விவரம் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் இறுதிப்போட்டியில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

7 பந்தில் மாறிய ஆட்டம்..! புவின்னா ஃபயரு..! கடைசி நேரத்தில் பதறிய மும்பை.. தப்பித்த ஐதராபாத்7 பந்தில் மாறிய ஆட்டம்..! புவின்னா ஃபயரு..! கடைசி நேரத்தில் பதறிய மும்பை.. தப்பித்த ஐதராபாத்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு கோலாகலமாக நடைபெறவுள்ளது.

ஐபிஎல் நிறைவு நிகழ்ச்சி

ஐபிஎல் நிறைவு நிகழ்ச்சி

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைபெறாமல் இருந்த நிறைவு நிகழ்ச்சி இந்தாண்டு நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத வகையில் சுமார் 1 லட்சத்து 20 பார்வையாளர்கள் இந்த போட்டியை நேரில் பார்க்க வரவுள்ளனர். முக்கிய விருந்தினர்களாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

கலை நிகழ்ச்சிகள்

கலை நிகழ்ச்சிகள்

இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான், ரன்வீர் சிங் ஆகியோர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ளனர். ஐபிஎல் தொடர் 15 ஆண்டுகள் நிறைவு மற்றும் இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திர கிரிக்கெட் ஆகியவற்றை மையமாக கொண்டு இந்நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதற்காக இந்தியாவின் முன்னாள் கேப்டன்கள், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போட்டி நேரங்கள்

போட்டி நேரங்கள்

நிறைவு நிகழ்ச்சியானது இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கவுள்ளது. சரியாக 45 நிமிடங்கள் வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைநிகழ்ச்சியால் போட்டியின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. அதாவது டாஸ் 7.30 மணிக்கு போடப்பட்டு, ஆட்டம் 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

 பலத்த பாதுகாப்பு

பலத்த பாதுகாப்பு

பல முக்கிய புள்ளிகள் இந்த போட்டியை காண வருவதால், அகமதாபாத் நகரத்தை சுற்றியும் 6000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மைதானத்திற்குள் மட்டுமே சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபவார்கள் எனத் தெரிகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL Final ceremony timings and GT vs RR match timings ( ஐபிஎல் இறுதிப்போட்டியின் நேரம் என்ன ) குஜராத் vs ராஜஸ்தான் அணிகள் மோதும் ஐபிஎல் இறுதிப்போட்டி எப்போது தொடங்கவுள்ளது. என்னென்ன கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
Story first published: Sunday, May 29, 2022, 17:28 [IST]
Other articles published on May 29, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X