கொதித்துப்போன சஞ்சு சாம்சன் மனைவி.. ராஜஸ்தானை அவமானப்படுத்திய ஐபிஎல் ஒளிபரப்பாளர்கள்.. தரமான பதிலடி!

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை இழிவுப்படுத்தியதற்கு சஞ்சு சாம்சனின் மனைவி தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதல் 2 மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் தற்போது இறுதிகட்டத்திற்கு வந்துள்ளது.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் இறுதிப்போட்டி

ஐபிஎல் இறுதிப்போட்டி

கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனில் கோப்பை ஷேன் வார்னே கேப்டன்சியில் வென்றிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன் பின்னர் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கே சிரமப்பட்டு வந்தது. 14வருட காத்திருப்புக்கு பலனாக தற்போது தான் 2வது கோப்பையை வெல்வதற்கான நேரம் வந்துள்ளது.

புதிய பிரச்சினை

புதிய பிரச்சினை

இந்நிலையில் ராஜஸ்தான் அணி அவமானப்படுத்தப்பட்டதாக புது பிரச்சினை கிளம்பியுள்ளது. இந்தாண்டு ஐபிஎல் முதல் போட்டியின் போது "ஐபிஎல் கோப்பைக்கான ரேஸ்" என்ற வகையில் கார்ட்டூன் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. ஐபிஎல் ஒளிபரப்பாளர்களால் இந்த வீடியோ வெளியிடப்பட்டது.

ராஜஸ்தானுக்கு துரோகம்

ராஜஸ்தானுக்கு துரோகம்

அனைத்து அணி கேப்டன்களும் இடம்பெற்றிருந்த இந்த வீடியோவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் சஞ்சு சாம்சன் புகைப்படம் இடம்பெறவில்லை. ராஜஸ்தான் அணி வழக்கம் போல் சொதப்பும் என அவர்கள் இப்படி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதன்பின்னர் இந்த பிரச்சினை குறித்து யாரும் பேசவில்லை.

 சஞ்சுவின் மனைவி கொந்தளிப்பு

சஞ்சுவின் மனைவி கொந்தளிப்பு

இந்நிலையில் சஞ்சு சாம்சனின் மனைவி சாருலதா கொந்தளித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், ஐபிஎல் கார்டூன் வீடியோவை பார்த்தேன்.. அதில் ராஜஸ்தான் மட்டும் ஏன் இடம்பெறவில்லை என வியப்பாக இருந்தது, தற்போது என்ன சொல்லப்போகிறார்கள் எனக் கேட்டு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL Final :Sanju Samson’s gives a Epic reply to IPL’s Broadcaster through her IG story
Story first published: Sunday, May 29, 2022, 12:57 [IST]
Other articles published on May 29, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X