500 மேட்ச் ஆடியிருக்கேன்.. என்னவேணும்னாலும் பண்ணுவேன்.. ஷ்ரேயாஸ் ஐயரால் சர்ச்சை.. காண்டான கங்குலி!

டெல்லி: பிசிசிஐ தலைவர் கங்குலி குறித்து டெல்லி அணியின் இளம் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்த கருத்து ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது.

ஐபிஎல் போட்டிகள் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் தொடக்கத்தில் இருந்து டெல்லி அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இளம் படையை கொண்டு இருக்கும் டெல்லியின் பேட்டிங் ஆர்டர் மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

அதிலும் ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. கடந்த தொடரிலேயே இவரின் கேப்டன்சி பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்த ஐபிஎல் தொடருக்கு முன் ஷ்ரேயாஸ் ஐயர் கொடுத்த பேட்டி ஒன்றுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், நான் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவது சந்தோசம் அளிக்கிறது. டெல்லி அணியின் கேப்டனாக அணியை வழி நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.

உதவி செய்தார்கள்

உதவி செய்தார்கள்

எனக்கு கங்குலி நிறைய உதவி செய்துள்ளார். என்னை அவர்தான் வழி நடத்தி வருகிறார். நான் டெல்லியை வழி நடத்த கங்குலியின் வழிகாட்டுதல் மற்றும் ரிக்கி பாண்டிங் கொடுத்த அறிவுரைகள்தான் காரணம். எனக்கு இரண்டு பேருமே வழி காட்டிகள். அவர்களுக்கு என் நன்றி என்று ஷ்ரேயாஸ் ஐயர் குறிப்பிட்டு இருந்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர் சர்ச்சை

ஷ்ரேயாஸ் ஐயர் சர்ச்சை

ஷ்ரேயாஸ் ஐயர் கொடுத்த இந்த பேட்டி பெரிய அளவில் சர்ச்சையானது. கங்குலி என்பவர் பிசிசிஐ தலைவர். அவர் தனிப்பட்ட வீரர் ஒருவருக்கு ஆதரவாக செயல்பட கூடாது. தனிப்பட்ட வீரர் ஒருவரை அவர் சப்போர்ட் செய்ய கூடாது . அதேபோல் ஐபிஎல் அணிகளையும் தனிப்பட்ட முறையில் அவர் சப்போர்ட் செய்ய கூடாது என்று சர்ச்சைகள் எழுந்தது.

பதில் கொடுத்தார்

பதில் கொடுத்தார்

இது பெரிய சர்ச்சை ஆன நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் அதற்கு பதில் கொடுத்து இருந்தார். அதில், இந்த விஷயத்தை இப்படி தவறாக பரப்புவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. கங்குலி, பாண்டிங் இருவரும் எனக்கு ஒரு இளம் வீரர் என்ற ரீதியில் அறிவுரைகள் வழங்கி உள்ளனர். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

நன்றி

நன்றி

அவர்களுக்கு நான் பெரிய அளவில் நன்றிக் கடன் பட்டு இருக்கிறேன். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவே இப்படி பேசினேன். இதில் எந்த தவறும் இல்லை, என்று ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் கங்குலியே இதற்கு பதில் அளித்துள்ளார். அதில், நான் கடந்த வருடம் ஷ்ரேயாஸ் ஐயருக்கு உதவி செய்தேன். அது உண்மைதான்.

தவறு என்ன

தவறு என்ன

அதில் என்ன தவறு இருக்க முடியும். பல வீரர்களுக்கு நான் உதவி செய்துள்ளேன். எந்த ஒரு வீரருக்கும் உதவி செய்யும், அறிவுரை வழங்கும் உரிமை எனக்கு இருக்கிறது. நான் பிசிசிஐ தலைவராக இருக்கலாம்.ஆனால் நான் முன்னாள் கிரிக்கெட் வீரர்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

நான் 500 போட்டிகள் ஆடி இருக்கிறேன் என்பதை மறக்க வேண்டாம். நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், யாரிடம் வேண்டுமானாலும் பேசுவேன். இளம் வீரர்களிடம் பேசுவதில் தவறு இல்லை. கோலியோ ஷ்ரேயாஸ் ஐயரோ யாராக இருந்தாலும் அவர்களின் வளர்ச்சிக்கு நான் கண்டிப்பாக உதவி செய்வேன், என்று கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL: Ganguly opens up on the controversy of Delhi Captain Iyer.
Story first published: Tuesday, September 29, 2020, 13:32 [IST]
Other articles published on Sep 29, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X