For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆகஸ்ட் 20ம் தேதி பயணத்த தொடங்குங்க... அப்பதான் சரியா இருக்கும்.. அணிகளிடம் ஐபிஎல் கோரிக்கை

டெல்லி : யூஏஇயில் ஐபிஎல் 2020 போட்டிகளின் தேதிகள் ஐபிஎல் நிர்வாகிகள் குழு கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 19ம் தேதி துவங்கும் தொடர், நவம்பர் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Recommended Video

IPL அணிகளிடம் BCCI கூறிய அறிவுரை

இம்மாதம் 10 முதல் 15ம் தேதிக்குள் ஐபிஎல் அணிகள் யூஏஇக்கு பயணம் மேற்கொளள் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 20ம் தேதி தங்களது பயணத்தை மேற்கொள்ள ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஐபிஎல்லின் 8 அணிகளும் யூஏஇக்கு ஒரே நேரத்தில் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதால் ஒரு வாரம் கழித்து பயணத்தை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் சீன ஸ்பான்சர்கள்.. பிசிசிஐ கூட்டத்தில் முடிவு.. அரசு அனுமதி கிடைக்குமா?ஐபிஎல் தொடரில் சீன ஸ்பான்சர்கள்.. பிசிசிஐ கூட்டத்தில் முடிவு.. அரசு அனுமதி கிடைக்குமா?

நிர்வாகிகள் குழு கூட்டத்தில் முடிவு

நிர்வாகிகள் குழு கூட்டத்தில் முடிவு

யூஎஇயில் ஐபிஎல் 2020 போட்டிகள் வரும் செப்டம்பர் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து நேற்று நடைபெற்ற ஐபிஎல் நிர்வாகிகள் குழு கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி ஏற்பாடுகளில் ஐபிஎல் நிர்வாகம் மற்றும் எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு இணைந்து செயல்பட்டு வருகிறது.

ஐபிஎல் நிர்வாகம் கோரிக்கை

ஐபிஎல் நிர்வாகம் கோரிக்கை

முன்னதாக இம்மாதம் 10ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் 8 ஐபிஎல் அணிகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் யூஏஇக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். இதையொட்டி ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐபிஎல் அணிகள் தங்களது பயணத்தை இம்மாதம் 20ம் தேதி மேற்கொள்ள ஐபிஎல் நிர்வாகம் அணிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

காலஅவகாசம் வேண்டும்

காலஅவகாசம் வேண்டும்

கோவிட் 19 விதிமுறைகள் குறித்து ஸ்டேக்ஹோல்டர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு, அதுகுறித்து யூஏஇ அரசு மற்றும் எமிரேட்ஸ் கிரிக்கெட் சங்கம் உள்ளிட்டவற்றுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்படும் என்பதால் அணிகள் ஒரு வாரம் கழித்து தங்களது பயணத்தை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நெறிமுறைகள்

பாதுகாப்பு நெறிமுறைகள்

ஐபிஎல்லின் 8 அணிகளிலும் மொத்தமாக 24 வீரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 வெளிநாட்டு வீரர்களும் அடங்கும். மேலும் ஒவ்வொரு அணியிலும் நெட் பௌலர்கள், பீல்டர்கள் மற்றும் மருத்துவர் உள்ளிட்டவர்களும் இந்த எண்ணிக்கையில் அடக்கம். தங்களது குடும்பத்தினரை அழைத்து செல்ல வீரர்கள் விரும்பினால் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களும் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Story first published: Monday, August 3, 2020, 13:09 [IST]
Other articles published on Aug 3, 2020
English summary
Family members are okay to travel as long as they will be part of the same Bio-Secure bubble -Sources
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X