For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் திறமையான பல வீரர்களை இந்திய அணிக்கு கொடுத்திருக்கு... அமித் மிஸ்ரா

டெல்லி : ஐபிஎல் போட்டிகளின் மூலம் இந்திய அணிக்கு பல திறமையான கிரிக்கெட் வீரர்கள் கிடைத்துள்ளதாக அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Recommended Video

Questioning Myself Why This Happened To Me: Amit Mishra says

கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. திட்டமிடப்பட்ட மார்ச் 29ம் தேதி ஐபிஎல் தொடங்கப்பட்டிருந்தால் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி இருந்திருப்பார்.

கடந்த 2008 ஐபிஎல் முதல் சீசனிலிருந்து கடந்த 12 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ் இந்தியா, சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்காக மிஸ்ரா விளையாடியுள்ளார்.

ஆப்கன் கிரிக்கெட் வீரருக்கு 6 ஆண்டு தடை.. சைலன்ட்டாக செய்த தில்லாலங்கடி வேலைகள் அம்பலம்!ஆப்கன் கிரிக்கெட் வீரருக்கு 6 ஆண்டு தடை.. சைலன்ட்டாக செய்த தில்லாலங்கடி வேலைகள் அம்பலம்!

12 ஆண்டுகளாக ஐபிஎல்லில் போட்டி

12 ஆண்டுகளாக ஐபிஎல்லில் போட்டி

இந்திய கிரிக்கெட்டின் ஸ்பின்னரான அமித் மிஸ்ரா கடந்த 2008ல் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து 12 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். டெக்கான் சார்ர்ஸ், புனே வாரியர்ஸ் இந்தியா, சன்ரைசர் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்காக இவர் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் 3 ஹாட் -டிரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமை இவருக்குண்டு.

ஐபிஎல் குறித்து மிஸ்ரா கருத்து

ஐபிஎல் குறித்து மிஸ்ரா கருத்து

ஐபிஎல் போட்டிகள் மூலம் இந்திய அணிக்கு பல திறமையான வீரர்கள் கிடைத்துள்ளதாக அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் டெல்லி கேபிடல்ஸ் சார்பில் பேசிய அவர், ஐபிஎல்லின் நன்மைகள் குறித்து பட்டியலிட்டார். அப்போது, ஐபிஎல் மூலம் பல வீரர்கள் நிதியுதவி பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா இயல்புநிலைக்கு திரும்ப வேண்டும்

கொரோனா இயல்புநிலைக்கு திரும்ப வேண்டும்

கொரோனா வைரஸ் பாதிப்பு முதலில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். இதுகுறித்து 3 மாதங்களாவது காத்திருந்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கிரிக்கெட் விளையாடுவது மிகவும் முக்கியமானது என்றாலும், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட சில மாங்கள் நாம் காத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரோல் மாடல் சச்சின் டெண்டுல்கர்

ரோல் மாடல் சச்சின் டெண்டுல்கர்

தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த மிஸ்ரா, இந்தியாவில் தன்னுடைய விருப்பத்திற்குரிய மைதானம் ஈடன் கார்டன் என்றும், தன்னுடைய ரோல் மாடல் வீரர் சச்சின் டெண்டுல்கர் என்றும் குறிப்பிட்டார். அனில் கும்ப்ளே, ஷேன் வார்னே போன்றவர்களும் தனக்கு பிடித்தமானவர்கள் என்றும் அவர் கூறினார்.

Story first published: Monday, May 11, 2020, 11:58 [IST]
Other articles published on May 11, 2020
English summary
Many young players also got Financial help through IPL -Amit Mishra
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X