முதல் போட்டியே இப்படியா? பார்த்ததும் கலக்கம் அடைந்த கோலி.. ஆர்சிபியை விடாமல் துரத்தும் ராசி!

துபாய்: 2020 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் முதல் போட்டியே அந்த அணிக்கு சின்ன அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் மிக முக்கிய போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் பெங்களூர் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடக்கிறது. மிகவும் வலுவான பவுலிங் ஆர்டர் கொண்ட ஹைதராபாத் அணியை பெங்களூர் எதிர்கொள்கிறது.

துபாய் மைதானம் பவுலிங்கிற்கு சப்போர்ட் செய்யும் மைதானம் ஆகும். அதேபோல் இங்கு ஸ்பின், ஸ்பீட் இரண்டும் நேற்றைய போட்டியில் நன்றாக பயன் கொடுத்தது. இதனால் இன்றைய போட்டி பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும்.

டிராவிட் கைகாட்டிய குட்டி பையன்.. கும்ப்ளேவை வியக்க வைத்த பவுலிங் ஸ்டைல்..ஐபிஎல் புது ஹீரோ இவர்தான்

முதலில் பவுலிங்

முதலில் பவுலிங்

அதிலும் இந்த மைதானத்தில் முதலில் பவுலிங் தேர்வு செய்யும் அணியே எளிமையாக வெல்ல முடியும் . ஏனென்றால் போக போக பவுலிங் செய்ய கஷ்டமாக இருக்கும். பனி காரணமாக இரண்டாவது இன்னிங்சில் பவுலிங் செய்ய கஷ்டமாக இருக்கும். அதேபோல் போக போக பேட்டிங் செய்யவும் பிட்ச் வசதியாக இருக்கும்.

வாய்ப்பு முதலில் டாஸ்

வாய்ப்பு முதலில் டாஸ்

சேசிங் செய்யும் அணியே இங்கு அதிகம் வெல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் இங்கே டாஸ் வெல்வது முக்கியம். ஆனால் பெங்களூர் அணி கேப்டன் கோலி இன்று டாஸில் தோல்வி அடைந்தார். பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் டாஸ் வென்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இது பெங்களூருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம்

கடந்த வருடம்

கடந்த வருடமும் ஐபிஎல் தொடரில் முதல் 13 போட்டிகளில் 10 போட்டிகளில் கோலி டாஸ் வெற்றிபெறவில்லை. முக்கியமான போட்டிகளில் எல்லாம் கோலி வரிசையாக டாஸ்சில் தோல்வி அடைந்தார். கடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் தோல்வி அடைய இது முக்கிய காரணமாக இருந்தது. இதை கோலியே கடந்த வருடம் குறிப்பிட்டு இருந்தார்.

என்ன கூறினார்

என்ன கூறினார்

கடந்த வருடம் இது தொடர்பாக பேட்டி அளித்த கோலி, தொடர்ந்து பெங்களூர் அணி டாஸ் தோல்வி அடைகிறது. இதுவும் கூட பெங்களூர் அணியின் தோல்விக்கு காரணம் ஆகும். எங்களுக்கு போட்டியின் திசையை தீர்மானிக்கும் சக்தி இல்லாமல் போய்விட்டது. டாஸ் வென்று இருந்தால் நிறைய போட்டிகளில் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும், என்று கோலி குறிப்பிட்டு இருந்தார்.

இந்திய அணியிலும் இப்படித்தான்

இந்திய அணியிலும் இப்படித்தான்

இதனால் கோலியை டாஸ் ராசி இல்லாத கேப்டன் என்று கூற பலர் கிண்டல் செய்து இருக்கிறார்கள். இதை கோலியும் ஒப்புக்கொண்டு இருக்கிறார். டாஸ் வென்றால் பேட்டிங் அல்லது பவுலிங்கில் எதை தேர்வு செய்வது என்ற அதிகாரம் கிடைக்கும். ஆனால் டாஸ்களில் நான் தோல்வி அடைவது போட்டியின் போக்கை மாற்றவிடுகிறது . இனி டாஸ் தோல்வி அடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்று பிளான் பி திட்டமிட வேண்டும் என்று கோலியே குறிப்பிட்டு இருந்தார்.

டாஸ் சதவிகிதம் என்ன?

டாஸ் சதவிகிதம் என்ன?

இந்திய அணியிலும் இவர் பல முறை டாஸ் தோல்வி அடைந்துள்ளார். 44% மட்டுமே இவர் ஐசிசி போட்டிகளில் டாஸ் வென்று இருக்கிறார். ரோஹித் சர்மா மற்றும் தோனி 50%க்கும் அதிகமாக டாஸ் வென்று இருக்கிறார்.அதிலும் தோனி அதிக அளவில் டாஸ்களை வென்று உள்ளார். ஆனால் கோலிக்கு மட்டுமே எப்போது டாஸ் ராசி இல்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில்தான் இன்றைய போட்டியிலும் கோலி டாஸ் தோல்வி அடைந்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL: Kohli and loss in toss is a failed love story in this season too.
Story first published: Monday, September 21, 2020, 19:42 [IST]
Other articles published on Sep 21, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X