For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுக்கு எதுக்கு 7 ஆயிரம் கோடி..?? IPL லக்னோ அணியின் தொடக்கமே மோசம்..!! பொளந்து கட்டும் ரசிகர்கள்..!

லக்னோ: ஐ.பி.எல். 15வது சீசனில் களமிறங்கும் புதிய அணியான லக்னோ தங்களது லோகோவை வெளியிட்டுள்ளது.

Recommended Video

IPL 2022: Lucknow Super Giants unveil logo | OneIndia Tamil

ஐ.பி.எல் ஏலம் நெருங்கி வரும் நிலையில், லக்னோ அணி ஜெட் வேகத்தில் தங்களது பணியை தொடங்கி வருகின்றனர்.

ஐபிஎல் 2022: டெல்லிக்கு தாவும் மும்பையின் முக்கிய வீரர்.. 3 அதிரடி வீரர்களை டார்கெட் செய்த பாண்டிங்!ஐபிஎல் 2022: டெல்லிக்கு தாவும் மும்பையின் முக்கிய வீரர்.. 3 அதிரடி வீரர்களை டார்கெட் செய்த பாண்டிங்!

அணியின் பெயரை லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் என்று கடந்த வாரம் அதன் உரிமையாளர் கோயங்கா அறிவித்தார்.

லக்னோ அணி

லக்னோ அணி

லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்கு பயிற்சியாரளாக ஆண்டி ஃபிளவர் மற்றும் மெண்டராக கம்பீர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல், 17 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2வது வீரராக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் மூன்றாவது வீரராக இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாய் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

புதிய லோகோ

புதிய லோகோ

இப்படி அனைத்து பணியையும் வேகமாக செய்து வரும் லக்னோ அணி, தங்களது லோகோவை ( அணியின் சின்னம்) வெளியிட்டனர். பேட்டிற்கு ரெக்தை விரித்தது போல் லக்னோ அணியின் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ரெக்கை இந்திய தேசிய கொடியின் நிறத்திலும், பேட் நீல நிறத்திலும் இருந்தன.

லோகோவின் அர்த்தம்

லோகோவின் அர்த்தம்

இந்து கலாச்சாரத்தில் நல்ல சகுணமாக பார்க்கப்படும் கருடன் என்ற பறவையை குறிக்கும் விதமாகவும், ஒட்டு மொத்த இந்தியாவுக்குமான அணி என்பதை குறிக்கும் விதமாக மூவர்ண கொடியில் றெக்கையும், பேட் மற்றும் பந்து நெற்றியில் வைக்கப்படும் வெற்றி திலகத்தையும் குறிக்கும் வகையில் அணியின் லோகோ அமைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விமர்சனம்

விமர்சனம்

எனினும் இந்த லோகோவுக்கு ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களே வந்துள்ளன. அனைத்தையும் வேகமாக செய்யும் கோயங்கா, தரமற்ற லோகோவை தயாரித்துள்ளதாக ரசிகர்கள் டிவிட்டரில் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த லோகோவை விட தாங்கள் சிறப்பான லோகோவை வடிவமைப்போம் என்றும், இது சிறு குழந்தைகள் தயாரித்த ஓவியம் போல் இருப்பதாகவும் ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர். 7 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்த அணி, லோகோவில் கோட்டை விட்டதாகவும் ரசிகர்கள் கோயங்காவை வெளுத்து வாங்குகின்றனர்.

Story first published: Tuesday, February 1, 2022, 9:09 [IST]
Other articles published on Feb 1, 2022
English summary
IPL Lucknow Super Giants team unveils their Logo Fans reactionஇதுக்கு எதுக்கு 7 ஆயிரம் கோடி..?? IPL லக்னோ அணியின் தொடக்கமே மோசம்..!! பொளந்து கட்டும் ரசிகர்கள்..!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X