ஐ.பி.எல். மெகா ஏலத்தில் பங்கேற்காத நட்சத்திர வீரர்கள்.. ரசிகர்கள் கவலை..!!

மும்பை: ஐ.பி.எல். 2022ஆம் ஆண்டு மெகா ஏலம் வரும் 12 மற்றும் 13ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு புதியதாக 2 அணிகள் பங்கேற்கின்றன.

ஏலத்திற்கு முன்பே 33 வீரர்களை தக்க வைத்ததன் மூலம் மொத்தமாக 338 கோடி ரூபாயை 10 அணிகளும் வெலவு செய்துள்ளது.

இந்த நிலையில், எப்போதும் போல் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்காத நிலையில், வெளிநாட்டு நட்சத்திரங்கள் சிலர் இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை

ஐ.பி.எல். மெகா ஏலம்.. வீரர்களின் ஆரம்ப விலை பட்டியல் வெளியீடு..!! முழு விவரம் இதோ..!!ஐ.பி.எல். மெகா ஏலம்.. வீரர்களின் ஆரம்ப விலை பட்டியல் வெளியீடு..!! முழு விவரம் இதோ..!!

கிறிஸ் கெயில்

கிறிஸ் கெயில்

தனக்கு தானே யுனிவர்சல் பாஸ் என்று பெயர் வைத்து கொண்ட சாம்பியன் வீரர் கிறிஸ் கெயில், இம்முறை ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்கவில்லை. 42 வயதாகி விட்டதால் கிறிஸ் கெயில் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏலத்தின் போதே கடைசியாக தான் கெயில் எடுக்கப்பட்டார். ஐ.பி.எல். வரலாற்றில் 6 சதம் விளாசியுள்ள கெயில், அதிக ரன்கள் அடித்துள்ள 3வது வெளிநாட்டு வீரர் ஆவார்

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அதிரடி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இம்முறை ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்கவில்லை. கடந்த 2017ஆம் ஆண்டு புனே அணி பென் ஸ்டோக்ஸை 14.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. 2018ஆம் ஆண்டு ராஜஸ்கான் அணி 12.2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. மொத்தமாக ஐ.பி.எல். தொடரில் 920 ரன்களும், 28 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் விதமாக ஐ.பி.எல். போட்டியில் விளையாடவில்லை என்று ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்

ஆர்சர்

ஆர்சர்

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆர்சர் கடந்த சீசனிலும் காயம் காரணமாக விளையாட வில்லை. தற்போது தான் காயத்திலிருந்து அவர் குணமடைந்த வருகிறார். இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் விளையாடினால் அவரது காயம் அதிகமாகி கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்துவிடும் அபாயம் உள்ளது. இதனால் அவர் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கவில்லை

மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க்

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விலகியதும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்காக பல்வேறு தொடரில் விளையாட வேண்டும் என்பதற்கு கவனம் செலுத்தும் விதமாக மிட்செல் ஸ்டார்க் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் கொரோனா பயோ பபுள் விதியும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது

சாம் கரண்

சாம் கரண்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுட்டி குழந்தையும், கடைக்குட்டி சிங்கம் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சாம் கரண், இம்முறை ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதனால் சி.எஸ்.கே ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். காயத்திலிருந்து குணமடைந்து வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்

ஜோ ரூட்

ஜோ ரூட்

இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட் இம்முறையும் ஏலத்தில் பங்கேற்கவில்லை. ஆஷஸ் தோல்வியால் இங்கிலாந்து அணி துவண்டு போய் உள்ள நிலையில், டெஸ்ட் அணியை தயார் படுத்தும் பணியில் இருப்பதால் ஐ.பி.எல். போட்டியை தியாகம் செய்வதாக ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL Mega auction 2022 List of Star Players Missing this season of IPL ஐ.பி.எல். மெகா ஏலத்தில் பங்கேற்காத நட்சத்திர வீரர்கள்.. ரசிகர்கள் கவலை..!!
Story first published: Saturday, January 22, 2022, 13:55 [IST]
Other articles published on Jan 22, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X