For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“பணமே வேணாம்.. அதுதான் இருந்திருக்கனும்”.. சிஎஸ்கே அணியின் தாராள மனசு.. கண்ணீர் விட்ட இளம் வீரர்!

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடாப்பிடியாக போராடி தன்னை ஏலம் எடுத்தது குறித்து இளம் வீரர் ராஜவர்தனே ஹங்கர்கேகர் கண்ணீர் மல்க நன்றி கூறியுள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் யாரையெல்லாம் ஏலம் எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது.

அந்த இரு அணிகளுமே சேர்ந்து ஒரு இளம் ஆல்ரவுண்டருக்கு அடித்துக் கொண்டது தான் சுவாரஸ்யமே.

ஐபிஎல் மெகா ஏலம்.. சிஎஸ்கே நிர்வாகிகள் யாருடன் போனில் பேசுவார்கள் தெரியுமா? வெளியான ருசிகர தகவல்ஐபிஎல் மெகா ஏலம்.. சிஎஸ்கே நிர்வாகிகள் யாருடன் போனில் பேசுவார்கள் தெரியுமா? வெளியான ருசிகர தகவல்

சிஎஸ்கே கடும் போட்டி

சிஎஸ்கே கடும் போட்டி

மகாராஷ்டிராவை சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் ராஜவர்தனே தான் அவர்.

ஹங்கர்கேகர் பெயர் வந்ததும் சிஎஸ்கே - மும்பை அணிகள் நேரடியாக களத்தில் குதித்தன. ஆனால் கடைசி வரை விடாப்பிடியாக இருந்த சென்னை அணி அவரை ரூ. 1.50 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவர் ஹர்திக் பாண்ட்யாவை போன்ற சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார். அதுவும் ஓப்பனிங் ஓவர்களையே வீசக்கூடிய பவுலர். இதனால் சிஎஸ்கே அணியின் பலம் பல மடங்கு கூடியுள்ளது.

கண்ணீர் மல்க நன்றி

கண்ணீர் மல்க நன்றி

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஹங்கர்கேகர், எனது தந்தை சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகர். அந்த அணி விளையாடும் போட்டிகளை விடவே மாட்டார். ஆனால் கடந்தாண்டு கொரோனாவால் உயிரழந்துவிட்டார். அவர் இங்கிருந்து நான் இன்று சிஎஸ்கேவுக்காக விளையாடப்போவதை பார்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். வார்த்தைகளே வரவில்லை எனக் கண்ணீர் மல்க கூறினார்.

பணம் முக்கியம் இல்லை

பணம் முக்கியம் இல்லை

தோனியின் கீழ் ஆடுவது குறித்து பேசிய அவர், பணத்தை விட எனக்கு கிரிக்கெட் தான் முக்கியம். நான் சிறப்பாக விளையாடினால் பணம் தானாக வரும். எனவே தோனியின் கீழ் சிறப்பாக விளையாடுவது மட்டுமே எனது முதல் கவனமாக தற்போது உள்ளது. அதனை செய்தும் காட்டுவேன் என ஹங்கர்கேகர் தெரிவித்துள்ளார்.

தோனியின் பாடம்

தோனியின் பாடம்

ஹங்கர்கேகரி பயிற்சியாளர் பேசுகையில், ஐபிஎல் என்பது ஒவ்வொரு வீரருக்கும் கனவு ஆகும். என்னைப்பொறுத்தவரை தோனியை பார்த்து பல விஷயங்களை ஹங்கர்கேகர் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் மிகவும் மன வலிமையான வீரர் தான். எனவே நிச்சயம் சிறப்பாக விளையாடி தந்தைக்கு பெருமை சேர்ப்பார் எனக்கூறினார்.

அசத்தல் புள்ளிவிவரம்

அசத்தல் புள்ளிவிவரம்

ராஜவர்த்தனே ஹங்கர்கேகர் மகாராஷ்டிரா அணிக்காக விஜய் ஹசாரே மற்றும் சையது முஷ்டக் அலி கோப்பையில் சிறப்பாக விளையாடியுள்ளார். உள்ளூர் போட்டியான வினோத் மான்காட் கோப்பையில் 8 போட்டிகளில் 19 விக்கெட்டுகளையும், 216 ரன்களையும் விளாசியுள்ளார். ஆசிய கோப்பையில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, February 14, 2022, 16:22 [IST]
Other articles published on Feb 14, 2022
English summary
Rajvardhan Hangargekar Remember his father with tears, after CSK Ropes him in IPL Mega Auction 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X