For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“தோனியால் இளம் வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறி?” திடீரென குவியும் குற்றச்சாட்டுக்கள்.. என்ன ஆனது

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலம் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் மவுனம் காத்த நிலையில் கடைசி நேரத்தில் வீரர்களை அள்ளியது.

ஐபிஎல் ஏலத்துக்கு பிறகு பலமான அணி எது? இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பதில்ஐபிஎல் ஏலத்துக்கு பிறகு பலமான அணி எது? இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பதில்

சிஎஸ்கேவின் மவுனம்

சிஎஸ்கேவின் மவுனம்

அந்த அணி முதல் நாளன்று பெரியளவில் முன்னணி வீரர்களை எடுக்கவில்லை. செலவளிக்க விரும்பாமல் ரூ.5 கோடி தாண்டினால் உடனடியாக போட்டியில் இருந்து பின் வாங்கியது. இதனால் மிக்சர் சாப்பிடவா அங்கு சென்றீர்கள் என பல மீம்ஸ்கள் இணையத்தில் பரவின. இதே போன்று தான் 2வது நாள் உணவு இடைவெளி வரையும் இருந்தது.

வீரர்களை குவித்த சிஎஸ்கே

வீரர்களை குவித்த சிஎஸ்கே

ஆனால் கடைசி சில மணி நேரத்தில் சென்னை அணி தான் அடுத்தடுத்து வீரர்களை ஏலம் எடுத்தது. ஆனால் அந்த அணி எடுத்த வீரர்களில் பெரும்பாலானோர் பெரிய அனுபவம் இல்லாத இளம் வீரர்கள். குறைந்த விலைக்கு பல இளம் வீரர்களை அணிக்குள் சேர்த்துக்கொண்டது. மேலும் ஏலம் முடிந்த பிறகும் அந்த அணி ரூ.2 கோடிக்கு மேல் கையில் வைத்திருந்தது. இது தான் தோனியின் திட்டமா என்று நேற்று விமர்சனங்கள் கிளம்பின.

குவியும் குற்றச்சாட்டு

குவியும் குற்றச்சாட்டு

இந்நிலையில் தோனிக்கு எதற்கு 25 வீரர்கள், 12 வீரர்கள் போதுமே என சர்ச்சை கிளம்பியுள்ளது. ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளில் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதை விட சிஎஸ்கேவில் மிகக்குறைவான வாய்ப்பே கிடைக்கும். இதற்கு காரணம் தோனியின் பிடிவாதம் தான். அணிக்கு என்ன ஆனாலும் அவர் ப்ளேயிங் 11ல் பெரிய மாற்றங்களை செய்யவே மாட்டார். ஏதேனும் ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் செய்துக்கொண்டு பழைய அணியுடனேயே பயணிப்பார்.

கேள்விக்குறியாகும் எதிர்காலம்

கேள்விக்குறியாகும் எதிர்காலம்

இதனால் 12 - 13 வீரர்களை தவிர்த்து அணியில் மீதமுள்ள 10க்கும் மேற்பட்ட வீரர்கள் கடைசி வரை வாய்ப்பு கிடைக்காமல் ஏமாந்துப்போவார்கள். அப்படி சில வீரர்கள் அடுத்த ஏலத்தின் போது மிகக்குறைந்த விலைக்கு செல்வதும் உண்டு. உதாரணத்திற்கு, கிருஷ்ணப்பா கௌதம் கடந்தாண்டு சிஎஸ்கேவால் ரூ. 9.25 கோடிக்கு எடுக்கப்பட்டு கடைசி வரை வாய்ப்பே கொடுக்கவில்லை. இதன் விளைவாக இந்தாண்டு அவர் வெறும் ரூ.90 லட்சத்திற்கு ஏலம் போனார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

இதே போல தான் நாராயண் ஜகதீசன், சட்டீஸ்வர் புஜாரா, மிட்செல் சாண்ட்னர் உள்ளிட்ட பல சிறந்த வீரர்களுக்கு கடந்தாண்டு சிஎஸ்கே ஒரு வாய்ப்பு கூட கொடுக்கவில்லை. இதனால் இந்தாண்டு மட்டும் ஏன் 25 வீரர்களை அணிக்கு எடுத்து அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறீர்கள், அதற்கு மேலும் செலவிட்டு முன்னணி வீர்களை வாங்கிக்கொள்ள வேண்டியது தானே என ரசிகர்கள் கொந்தளிப்புடன் தோனியை சாடி வருகின்றனர்.

Story first published: Monday, February 14, 2022, 19:54 [IST]
Other articles published on Feb 14, 2022
English summary
Cricket Fans slams captain Dhoni, after CSK picks 25 players in the Squad for IPL 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X