For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே செய்த துரோகம்.. பெரும் இழப்பை சந்தித்த இளம் வீரர்.. தோனி இப்படி செய்திருக்க கூடாது!!

பெங்களூரு: சிஎஸ்கே அணி செய்த துரோகத்தால் இளம் வீரர் ஒருவர் பெரும் இழப்பை சந்தித்துள்ளது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

IPL 2022 Auction: Krishnappa Gowtham’s massive salary cut from IPL 2021 | Oneindia Tamil

ஐபிஎல் மெகா எலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் மொத்தமாக 206 வீரர்கள் ஏலம் போனார்கள்

யாரும் எதிர்பார்க்காத வகையில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத இளம் வீரர்களுக்கு பண மழை பொழிந்தது.

IPL 2022- சிஎஸ்கே பிளேயிங் லெவன் இப்படி தான் இருக்கும்..!! தோனியின் மாஸ்டர் பிளான்IPL 2022- சிஎஸ்கே பிளேயிங் லெவன் இப்படி தான் இருக்கும்..!! தோனியின் மாஸ்டர் பிளான்

இளம் வீரருக்கு சோகம்

இளம் வீரருக்கு சோகம்

பல இளம் வீரர்களுக்கும் கோடிக்கணக்கில் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு வீரர் மட்டும் பெரும் இழப்பை சந்தித்துள்ளார். அதுவும் சிஎஸ்கே அணி செய்த தவறால் தான் அப்படி ஆனது என்றால் நம்ப முடிகிறதா?. கர்நாடகாவை சேர்ந்த கிருஷ்ணப்பா கௌதம் தான் அது. தொடக்கத்தில் நன்கு போட்டியுடன் ஆரம்பித்த இவரின் ஏலம் சிறிது நேரத்திலேயே முடிந்து அதிர்ச்சி கொடுத்தது.

குறைந்த பணம்

குறைந்த பணம்

ரூ. 50 லட்சம் என்ற அடிப்படை தொகையுடன் களமிறங்கிய அவரை முதலில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் ஏலம் எடுக்க பணத்தை அதிகரித்தன. ஆனால் அதனை ஒரே ஒருமுறையோடு நிறுத்திக்கொள்ள இறுதியில் லக்னோ அணி ரூ.90 லட்சத்திற்கு கிருஷ்ணப்பா கௌதமை வாங்கியது. இது அவருக்கு பல மடங்கு நஷ்டமாகும்.

சிஎஸ்கே செய்த துரோகம்

சிஎஸ்கே செய்த துரோகம்

கடந்தாண்டு இதே கிருஷ்ணப்பா கௌதமை ரூ. 9 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் அதிகபட்ச தொகைக்கு சென்றவர் என்ற பெருமையை பெற்றார். ஆனால் அவருக்கு கடந்த சீசனில் ஒரு போட்டியில் கூட கேப்டன் தோனி விளையாட வாய்ப்பு தரவில்லை. ரூ. 9 கோடி கொடுத்து எடுத்தும், விளையாட விடாமல் வெளியே உட்காரவைத்தது. இதனால் அவரின் திறமையை நிரூபிக்க முடியாமல் இந்தாண்டு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரெக்கார்ட்

ரெக்கார்ட்

33 வயதாகும் ஆல்ரவுண்டரான கிருஷ்ணப்பா கௌதம் ஐபிஎல் தொடரில் ஓரளவிற்கு அனுபவமிக்கவர். கடந்த 2018ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டு, அதன் பின்னர் 2021ம் ஆண்டு சிஎஸ்கேவுக்கு சென்றார். இதுவரை 24 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வாய்ப்பு கிடைக்காததே இவரின் ரெக்கார்ட் குறைவாக இருப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது.

Story first published: Monday, February 14, 2022, 11:27 [IST]
Other articles published on Feb 14, 2022
English summary
Young spinner Krishnappa Gowtham’s faces the massive salary cut from 9.35 cr to 90 Lakhs, because of CSK's mistake
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X