For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

9 மாதங்கள்.. எந்திரிக்க கூட முடியாது.. மோசமாக பாதிக்கப்பட்ட டேவிட் வார்னர்.. ஐபிஎல்லில் சிக்கல்!?

சென்னை: இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது காயம் அடைந்த டேவிட் வார்னர் மீண்டும் முழுமையாக களமிறங்க 9 மாதங்கள் வரை ஆகும் என்கிறார்கள்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

இந்த 7 பேர்தான் கேம் சேஞ்சர்ஸ்.. கோலி எடுத்த முடிவால் அதிர்ந்து போன பிசிசிஐ.. இப்படி பார்த்ததே இல்லைஇந்த 7 பேர்தான் கேம் சேஞ்சர்ஸ்.. கோலி எடுத்த முடிவால் அதிர்ந்து போன பிசிசிஐ.. இப்படி பார்த்ததே இல்லை

நாளை இந்தியா இங்கிலாந்து இடையிலான பிங்க் பால் டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. பகலிரவு ஆட்டமாக இந்த டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.

எப்படி

எப்படி

இன்னொரு பக்கம் ஐபிஎல் தொடருக்கும் இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகிறார். ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடர் நடக்க உள்ளது. இந்த நிலையில் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது காயம் அடைந்த டேவிட் வார்னர் இன்னும் மீண்டு வரவில்லை.

மீளவில்லை

மீளவில்லை

டேவிட் வார்னர் மீண்டும் முழுமையாக களமிறங்க 9 மாதங்கள் வரை ஆகும் என்கிறார்கள். இவருக்கு அடி வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக பாதி போட்டியில் டேவிட் வார்னர் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார்.

டெஸ்ட்

டெஸ்ட்

அதன்பின் டெஸ்ட் போட்டியில் ஆடினார். ஆனாலும் இவரின் காயம் முழுமையாக குணமடையவில்லை. இதன் காரணமாக தற்போது இவர் பந்தை கூட தூக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஓடுவது கூட இவருக்கு மிகவும் கஷ்டமான காரியமாக மாறியுள்ளது.

கஷ்டம்

கஷ்டம்

இந்த நிலையில் தனது காயம் குறித்து பேசிய டேவிட் வார்னர், என்னுடைய காயம் மோசமான நிலையில் இருக்கிறது. நான் மீண்டும் களத்தில் முழுமையாக களமிறங்க 6-9 மாதங்கள் ஆகும். என்னால் குனிந்து பந்தை கூட எடுக்க முடியவில்லை.

முடியவில்லை

முடியவில்லை

என்னால் எங்குமே ஓட முடியவில்லை. எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது, என்று டேவிட் வார்னர் குறிப்பிட்டுள்ளார் . டேவிட் வார்னரின் இந்த காயம் காரணமாக ஐபிஎல் 2021 தொடரில் அவர் ஆடுவாரா, ஹைதராபாத் அணியின் கேப்டனாக நீடிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Tuesday, February 23, 2021, 10:34 [IST]
Other articles published on Feb 23, 2021
English summary
IPL Mini Auction 2021: David may not play games for the next 9 months due to his groin injury.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X