நல்லா டீலிங் பேசி வாங்கிட்டாங்க.. வருத்தம்.. சிஎஸ்கே வீரரால் அதிர்ச்சியில் ஐபிஎல் அணி.. பின்னணி

சென்னை: விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.

எப்போதும் ஐபிஎல் போட்டிகளில் நன்றாக ஆடும் சிஎஸ்கே அணி கடந்த சீசனில் மோசமாக சொதப்பி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால் இந்த முறை 6 வீரர்களை ரிலீஸ் செய்துவிட்டு, புதிய 6 வீரர்களை சிஎஸ்கே அணி ஏலம் எடுத்து இருக்கிறது.

இதனால் 2021 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி மீண்டும் அதிரடி காட்டும் என்று நம்பப்படுகிறது.

விஜய் ஹசாரே

விஜய் ஹசாரே

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இவர் இந்த தொடரில் மற்ற வீரர்களை விட அதிரடியாக ஆடி வருகிறார். இதுவரை கேரளா ஆடிய மூன்று போட்டிகளிலும் இவர் அதிரடியாக 50+ ரன்களை எடுத்துள்ளார்.

பேட்டிங்

பேட்டிங்

முதல் போட்டியில் இவர் சதம் எடுத்தார். இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் 80+ ரன்களை எடுத்தார். தற்போது மூன்றாவது போட்டியிலும் 61 ரன்களை கடந்து அதிரடியாக ஆடி வருகிறார். இதனால் இவரின் பேட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

சிறப்பு

சிறப்பு

இவரின் பேட்டிங் பார்த்து சிஎஸ்கே அணி மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறது. கண்டிப்பாக இவரை இன்னொரு ஓப்பனிங் வீரராக களமிறக்கலாம் என்ற சந்தோஷத்தில் சிஎஸ்கே இருக்கிறது. சிஎஸ்கே வீரர்கள் எல்லோரும் நல்ல பார்மில் இருப்பதால் அணி நிர்வாகம் உற்சாகம் அடைந்துள்ளது.

ரிலீஸ்

ரிலீஸ்

அதே சமயம் இவரை ரிலீஸ் செய்துவிட்டு ராஜஸ்தான் அணி வருத்தத்தில் உள்ளது. தேவையின்றி சிஎஸ்கேவிற்கு இவரை டிரேட் செய்துவிட்டோமே என்று ராஜஸ்தன அணி வருத்தத்தில் உள்ளது. இவர் பார்மில் இல்லை என்று நினைத்து ரிலீஸ் செய்துவிட்டோம்.

 அனுப்ப மாட்டோம்

அனுப்ப மாட்டோம்

தெரிந்து இருந்தால் இவரை சிஎஸ்கேவிற்கு அனுப்பி இருக்க மாட்டோம் என்று ராஜஸ்தான் அணி நினைக்கிறது. ராஜஸ்தான் அணியில் பெரிய அளவில் நல்ல ஓப்பனிங் வீரர்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டிரேடிங் சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக மாறியுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL Mini Auction 2021:Robin Uththappa continues his good form in Vijay Hazare Trophy.
Story first published: Wednesday, February 24, 2021, 12:28 [IST]
Other articles published on Feb 24, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X