For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் பணமெல்லாம் கங்குலி வீட்டுக்கா போகுது... கடுப்பான பிசிசிஐ பொருளாளர்

டெல்லி : ஐபிஎல்லில் பெறப்படும் நிதி வீரர்களுக்கும், அரசுக்கு வரிப்பணமாகவும் தான் செலவிடப்படுவதாக பிசிசிஐ பொருளாளர் அருண் குமார் துமால் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Nasser Hussain hated Ganguly for making him wait for toss

ஐபிஎல் குறித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஊடகங்களும் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல்லின் நிதி கங்குலி, ஜெய் ஷா மற்றும் தனது வீட்டிற்கு செல்வதில்லை என்று அருண் துமால் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்கள், ரசிகர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளாகவும் அவர் கூறியுள்ளார்.

எனக்கு கங்குலியை பிடிக்காது.. அவர் ஒவ்வொரு தடவையும்.. கொட்டித் தீர்த்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன்!எனக்கு கங்குலியை பிடிக்காது.. அவர் ஒவ்வொரு தடவையும்.. கொட்டித் தீர்த்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன்!

காலவரையின்றி ஒத்திவைப்பு

காலவரையின்றி ஒத்திவைப்பு

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 29ம் தேதி துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டால், அந்த அட்டவணையில் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

தொடரை நடத்த அவசியம் என்ன?

தொடரை நடத்த அவசியம் என்ன?

இந்நிலையில், அதிகமான நிதி கையாளப்படும் இடமாக ஐபிஎல் தொடர் விளங்குகிறது. கோடிக்கணக்கில் செலவிடப்பட்டு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகின்றனர். அதிகமான பணம் இங்கு விளையாடுகிறது. வெளிநாட்டு வீரர்கள் உள்பட அனைவரும் ஐபிஎல்லை விளையாட ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உள்ள நிலையிலும் இந்த தொடரை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று பல்வேறு தரப்பினர் மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.

வீரர்களுக்கும் வரிகட்டவும் பயன்படுகிறது

வீரர்களுக்கும் வரிகட்டவும் பயன்படுகிறது

இதனிடையே, ஐபிஎல்லில் பெறப்படும் நிதி அனைத்தும் வீரர்களுக்கும் வரிப்பணம் உள்ளிட்டவை வாயிலாக அரசுக்கும் தான் செலவிடப்படுவதாகவும், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் பொருளாளரான தனது வீட்டுக்கு கொண்டு செல்லப்படுவதில்லை என்று அருண்குமார் துமால் தெரிவித்துள்ளார்.

வீரர்களின் நலனில் அக்கறை

வீரர்களின் நலனில் அக்கறை

விளையாட்டிற்காக அரசு செலவிட வேண்டிய நிலையில், ஐபிஎல் மூலமாக அரசுக்கு பணம் வருகிறது. இதுகுறித்து கேள்வி எழுப்புபவர்கள் மகிழ்ச்சி தான் அடையவேண்டும் என்றும் துமால் குறிப்பிட்டுள்ளார். வீரர்கள், ரசிகர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டே, ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பான சூழல் உருவானபின்பே இந்த தொடர் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Sunday, July 5, 2020, 16:49 [IST]
Other articles published on Jul 5, 2020
English summary
Money is paid to the players and all those people who are there to organise the tournament -Dhumal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X