For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் பிளே ஆஃப்- இன்றைய ஆட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய 5 வீரர்கள்.. முடிவையே மாற்றும் திறமையாளர்கள்

மும்பை: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் முதல் குவாலிபையரில் ராஜஸ்தான்,குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும்.

இன்றைய ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய 5 வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

ஐபிஎல் பிளே ஆஃப் இன்று நடைபெறுமா? கொல்கத்தாவின் வானிலை அறிக்கை.. பிட்ச் ரிப்போர்ட் வெளியானதுஐபிஎல் பிளே ஆஃப் இன்று நடைபெறுமா? கொல்கத்தாவின் வானிலை அறிக்கை.. பிட்ச் ரிப்போர்ட் வெளியானது

ஜாஸ் பட்லர்

ஜாஸ் பட்லர்

ராஜஸ்தான் அணியின் முக்கிய பலமாக விளங்க கூடியவர் ஜாஸ் பட்லர். இன்றைய ஆட்டத்தில் ஜாஸ் பட்லர் எப்படி விளையாடிகிறாரோ அதை பொறுத்து தான் ராஜஸ்தான் அணியின் முடிவு இருக்கும். நடப்பு சீசனில் 14 போட்டியில் விளையாயுள்ள பட்லர், 629 ரன்களை குவித்து ஆரஞ்ச் தொப்பியை தக்க வைத்துள்ளார். இதில் 3 சதங்கள் அடங்கும்.

சாஹல்

சாஹல்

ராஜஸ்தான் அணியின் மற்றொரு பலம் சுழற்பந்துவீச்சாளர் சாஹல் தான். இதுவரை 14 போட்டியில் விளையாடி 26 விக்கெட்டுகளை சாஹல் வீழ்த்தியுள்ளார். இதில் ஒரு முறை 5 விக்கெட்டுகளும், ஒரு முறை 4 விக்கெட்டுகளும் அடங்கும். இன்னும் 1 விக்கெட்டை சாஹல் எடுத்தால் , ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக விக்கெட் எடுத்த சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெறுவார்.

ரஷித் கான்

ரஷித் கான்

குஜராத் அணி ஏலத்திற்கு முன்பே தக்க வைத்து கொண்ட வீரர் ரஷித் கான்.14 போட்டியில் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், பேட்டிங்கிலும் இறதியில் வந்து பெரிய ஷாட்களை ஆடி கலக்குகிறார். ஸ்ட்ரைக் ரேட் பேட்டிங்கில் 206 என்ற அளவில் வைத்துள்ளார். ஜாஸ் பட்லரை ரஷித் இதுவரை 4 முறை ஆட்டமிழக்க வைத்துள்ளார். ரஷித் பந்துவீச்சில் பட்லரின் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 60 தான். இதனால் ரஷித் கானை வைத்து பட்லர் விக்கெட்டை வீழ்த்த குஜராத் முயற்சி செய்யலாம்.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். 13 போட்டியில் விளையாடி 413 ரன்களை குஜராத் அணிக்காக ஹர்திக் பாண்டியா அடித்துள்ளார். பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். குஜராத் அணி வெல்ல வேண்டும் என்றால், அது முழுக்க முழுக்க ஹர்திக்கின் கையில் தான் உள்ளது.

அஸ்வின்

அஸ்வின்

ராஜஸ்தான் அணியின் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரமாக அஸ்வின் விளங்குகிறார். அஸ்வின் இம்முறை பேட்டிங்கில் நடுவரிசையில் களமிறங்கி வேகமாக ரன்களை அடித்து வருகிறார். பந்துவீச்சில் 14 போட்டியில் விளையாடி 11 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 183 ரன்களையும் விளாசி இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் அஸ்வின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

Story first published: Tuesday, May 24, 2022, 16:45 [IST]
Other articles published on May 24, 2022
English summary
IPL Play offs – 5 Players who can make big impact in GT vs RR 1st Qualifier ஐபிஎல் பிளே ஆஃப்- இன்றைய ஆட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய 5 வீரர்கள்.. முடிவையே மாற்றும் திறமையாளர்கள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X