ஐபிஎல் பிளே ஆஃப்- இறுதிப் போட்டிக்கு செல்வது யார்?ராஜஸ்தான், குஜராத் பலப்பரீட்சை..பலம்,பலவீனம் என்ன?

கொல்கத்தா: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுகள் இன்று முதல் தொடங்குகிறது. முதல் குவாலிபையரில் குஜராத், ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்று அறிமுகப்படுத்திய பிறகு முதல் முறையாக ராஜஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.

IPL 2022 GT vs RR: Predicted Playing 11 என்ன? | Aanee's Appeal | #Cricket | OneIndia Tamil

குஜராத் அணி, முதல் தொடரிலேயே பிளே ஆஃப் சுற்றுக்கு வந்துள்ளது. குஜராத் அணி இவ்வளவு தூரம் தகுதி பெறும் என யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள்.

குஜராத் Vs ராஜஸ்தான்

குஜராத் Vs ராஜஸ்தான்

ஆனால் அந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இது தான் குஜராத் அணியின் பலமாக கருதப்படுகிறது. இரு அணிகளும், லீக் சுற்றில் ஒருமுறை தான் மோதியது. அந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா 87 ரன்கள் விளாசி குஜராத் அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். குஜராத் அணி நடப்பு சீசனில் 7 முறை செஸிங் செய்து, அதில் 6 முறை வெற்றி பெற்றுள்ளது.

கட்டாயம்

கட்டாயம்

இதனால் டாஸ் வென்றால் குஜராத் அணி பந்துவீச்சை தான் தேர்வு செய்யும். தொடக்க வீரர் சாஹா, காயத்திலிருந்து குணமடைந்து இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். மற்றொரு தொடக்க வீரத் சுப்மான் கில், கடந்த சில ஆட்டமாக ரன் குவிக்கவில்லை. இதனால் அவர் ஃபார்ம்க்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா ஆகியோர் பேட்டிங்கில் ஜொலித்தால் மட்டுமே ராஜஸ்தானை சமாளிக்க முடியும். கொல்கத்தாவில் மழை பெய்து இருப்பதால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பந்துவீசுவதில் கொஞ்சம் சிரமம் ஏற்படலாம். ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை சிஎஸ்கேக்கு எதிராக பெற்ற வெற்றி நல்ல உத்வேகத்தை தந்துள்ளது.

ராஜஸ்தான் பலம்

ராஜஸ்தான் பலம்

ஜாஸ் பட்லர், படிக்கல், ஹேட்மயர், ரியான் பராக், அஸ்வின் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பலமாக விளங்குகிறார்கள். பந்துவீச்விசலும் அஸ்வின், சாஹல், பிரசித் கிருஷ்ணா, பௌல்ட் என பலமாக விளங்குகிறது. எனினும் ஒரு சில வீரர்களை மட்டும் நம்பமால் கூட்டாக விளையாடினால் குஜராத்துக்கு பதிலடி தரலாம். ராஜஸ்தான் அணிக்கு டாஸ் இந்த தொடரில் கைக்கொடுக்கவே இல்லை.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

குஜராத் அணி 1. சாஹா, 2, சுப்மான் கில், 3. மேத்தீவ் வாட், 4, ஹர்திக் பாண்டியா, 5, டேவிட் மில்லர். 6, ராகுல் திவாட்டியா, 7, ரஷித் கான், 8, சாய் கிஷோர், 9, முகமது ஷமி, 10, லோகி பெகுர்சன். 11, யாஷ் தயல்

ராஜஸ்தான் அணி 1, ஜாஸ் பட்லர், 2. ஜெய்ண்வால், 3, சஞ்சு சாம்சன், 4, படிக்கல். 5, ஷிம்ரன் ஹேட்மயர். 6. ரியான் பராக். 7. அஸ்வின் 8. டிரெண்ட் பவுல்ட். 9. மெக்காய். 10, சாஹல். 11. பிரசித் கிருஷ்ணா

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL Playoff 2022 – Rajasthan vs Gujarat faces each other in first qualifier ஐபிஎல் பிளே ஆஃப்- இறுதிப் போட்டிக்கு செல்வது யார்?ராஜஸ்தான், குஜராத் பலப்பரீட்சை..பலம்,பலவீனம் என்ன?
Story first published: Tuesday, May 24, 2022, 10:00 [IST]
Other articles published on May 24, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X