For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதை யாரும் யோசிக்கலயே..? மழை பெய்தால் 2 அணிக்குமே ஆபத்து தான்.. ஐபிஎல்லில் காத்திருக்கும் ட்விஸ்ட்

கொல்கத்தா: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று போட்டி இன்று நடைபெறும் நிலையில், கொல்கத்தாவில் மழை மீண்டும் குறுக்கிட்டுள்ளது.

Recommended Video

IPL 2022 Playoffs நடக்குமா? மிரட்டும் Kolkata Weather Report | #Cricket

காலையில் மழை இல்லாத நிலையில், 12.30 மணி அளவில் வெயில் கொஞ்சம் எட்டி பார்த்தது. ஆனால் தற்போது வானிலை அறிக்கையின் படி மழை பெய்ய தொடங்கிவிட்டது.

இரவு வரை மழை விட்டு விட்டு பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இரு அணிக்குமே ஆபத்து காத்துள்ளது.

ஐபிஎல் பிளே ஆஃப்பில் சாதனைகள்.. அதிக ரன்கள், அதிக வெற்றி பெற்றவர்கள் யார்..? முழு விவரம் இதோ ஐபிஎல் பிளே ஆஃப்பில் சாதனைகள்.. அதிக ரன்கள், அதிக வெற்றி பெற்றவர்கள் யார்..? முழு விவரம் இதோ

டாஸ் குழப்பம்

டாஸ் குழப்பம்

மழை தொடர்ந்து பெய்தால், ஆட்டம் தடையாகி, குஜராத் இறுதிப் போட்டிக்கு சென்றதாக அறிவிக்கப்படும். ஆனால், இப்போது மழை விட்டு விட்டு பெய்வதால், அது இரு அணிகளுக்குமே ஆபத்தை தரும். குறிப்பாக டாஸ் விஷயத்தில் பெரிய குழப்பம் ஏற்படும். நடப்பு சீசனில் 7 முறை செஸிங் செய்து, 6 போட்டியில் குஜராத் வென்று இருக்கிறது.

டக்வொர்த் விதி

டக்வொர்த் விதி

தற்போது மழை பெய்கிறது என்றாலே, டக்வொர்த் விதிகள் அணியின் விதியில் விளையாடும். இதனால், இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகமாக இருக்கும். ஏனெனில் 2வது பேட்டிங் செய்யும் போது எந்த ஓவரில் எந்த ரன்கள் அடிக்க வேண்டும் என்று தெரிந்துவிடும். மேலும், முதலில் பேட் செய்யும் அணிக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் ஒன்று உள்ளது.

வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சு

மழை பெய்து இருப்பதால் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும். இதனால் பௌல்ட், முகமது ஷமி போன்ற வீரர்கள் அந்த நேரத்தில் பந்துவீசினால் விக்கெட்டுகள் சரமாரியாக விழ வாய்ப்புள்ளது. விக்கெட்டுகள் போக கூடாது என்று மெதுவாக விளையாடினால், அது டக்வொர்த் விதி பிறகு அமலில் வந்தாலும் பாதிக்கும்.

சுழற்பந்துவீச்சுக்கு சிக்கல்

சுழற்பந்துவீச்சுக்கு சிக்கல்

இரண்டு அணிகளுக்கும் உள்ள முக்கிய பிரச்சினையே , இரு அணிகளும் சுழற்பந்துவீச்சை வெகுவாக நம்பியுள்ளது. ராஜஸ்தான் அணி சாஹலையும், அஸ்வினையும், குஜராத் அணி ரஷித் கான் மற்றும் சாய் கிஷோரையும் நம்பி இருக்கின்றன. தற்போது ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் சுழற்பந்துவீச்சாளர்களால் சரியாக பந்துவீச முடியாது. இது இரண்டு அணிகளுக்கும் சிக்கலே.

Story first published: Tuesday, May 24, 2022, 15:00 [IST]
Other articles published on May 24, 2022
English summary
IPL Playoffs 2022 – How Rain might affect both GT and RR ஐபிஎல்லில் பிளே ஆஃப் சுற்று போட்டி இன்று நடைபெறும் நிலையில், கொல்கத்தாவில் மழை மீண்டும் குறுக்கிட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X