For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் எலிமினேட்டர்- பெங்களூரு, லக்னோ அணிகள் இன்று மோதல்.. சாதிப்பாரா கோலி? ராகுல் அளிக்கும் சவால்

கொல்கத்தா: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியும், பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

நாக் அவுட் போட்டியான இதில், தோற்கும் அணி தொடரை விட்டு சென்றுவிட வேண்டும். வெற்றி பெறும் அணி குவாலிபையர் 2வில் ராஜஸ்தானை எதிர்கொள்ளும்.

கொல்கத்தாவில் இன்னும் மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று மழை பெய்யாததால், இன்றும் போட்டி சிக்கல் இன்றி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை யாரும் யோசிக்கலயே..? மழை பெய்தால் 2 அணிக்குமே ஆபத்து தான்.. ஐபிஎல்லில் காத்திருக்கும் ட்விஸ்ட்இதை யாரும் யோசிக்கலயே..? மழை பெய்தால் 2 அணிக்குமே ஆபத்து தான்.. ஐபிஎல்லில் காத்திருக்கும் ட்விஸ்ட்

லக்னோ பேட்டிங்

லக்னோ பேட்டிங்

லக்னோ அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பலமாக விளங்குகிறது. நடப்பு சீசனில் குயின்டன் டி காக் 502 ரன்களும், கேப்டன் ராகுல் 537 ரன்களும், தீபக் ஹூடா 406 ரன்களும் லக்னோ அணிக்காக அடித்துள்ளனர். ஆனால், மற்ற வீரர்கள் அனைவரும் சேர்ந்து மொத்தமாகவே 789 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர்.

பலமான பந்துவீச்சு

பலமான பந்துவீச்சு

காயம் காரணமாக கடந்த போட்டியில் களமிறங்காத குர்னல் பாண்டியா, இன்றைய ஆட்டத்திற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குர்னல், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோரும் பேட்டிங்கில் கைக்கொடுத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். லக்னோ அணியின் பந்தவீச்சு தான் அந்த அணியை பலமுறை காப்பாற்றியுள்ளது. ஆவேஷ் கான், மோஷின் கான் ஆகியோர் ஆர்சிபிக்கு கடும் நெருக்கடி தருவார்கள்.

ஆர்சிபி பேட்டிங்

ஆர்சிபி பேட்டிங்

ஆர்சிபி அணியை பொறுத்தவரை விராட் கோலி பார்ம்க்கு திரும்பியது பலமாக கருதப்படுகிறது. கோலி, டுபிளஸிஸ், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோரை நம்பியே அந்த அணியின் பேட்டிங் உள்ளது. பட்டிதார் மற்றும் லோம்ரோரும் முக்கிய ஆட்டத்தில் ரன் குவித்தனர். இதனால் ஆர்சிபி பேட்டிங் Choke ஆகாமல் விளையாடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

ஆர்சிபி பந்துவீச்சு

ஆர்சிபி பந்துவீச்சு

இதே போன்று ஹர்சல் பட்டேல், ஹேசல்வுட், ஹசரங்கா ஆகியோர் லக்னோ அணிக்கு நெருக்கடி தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நெருக்கடிகளை சமாளித்து எந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்களோ, அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். பிளே ஆப் சுற்றில் தகுதி பெற்றுள்ள எந்த அணியுடனும், லீக் போட்டியில் லக்னோ வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

ஆர்சிபி 1, டுபிளஸிஸ், 2, விராட் கோலி, 3, பட்டிதார். 4, மேக்ஸ்வெல். 5, லோம்ரர், 6,தினேஷ் கார்த்திக், 7,ஷபாஷ் அகமது. 8, ஹசரங்கா, 9, ஹர்சல் பட்டேல். 10. ஹேசல்வுட். 11. முகமது சிராஜ்

லக்னோ 1. குயின்டன் டி காக், 2, கேஎல் ராகுல். 3, தீபக் ஹூடா, 4,குர்னல் பாண்டியா, 5, ஆயூஷ் பதோனி. 6. மார்கஷ் ஸ்டோனிஸ், 7, ஜேசன் ஹோல்டர். 8, ஆவேஷ் கான், 9, சமீரா 10, மோசின் கான், 11, ரவி பிஸ்னாய்

Story first published: Wednesday, May 25, 2022, 11:24 [IST]
Other articles published on May 25, 2022
English summary
IPL Playoffs 2022- RCB and LSG Facing each other in Eliminator ஐபிஎல் எலிமினேட்டர்- பெங்களூரு, லக்னோ அணிகள் இன்று மோதல்.. சாதிப்பாரா கோலி? ராகுல் அளிக்கும் சவால்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X