ராஜஸ்தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன? எங்கே சொதப்பினார் கேப்டன் சஞ்சு சாம்சன்?

கொல்கத்தா:ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் முதல் குவாலிபையர் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு சென்றது.

பிளே ஆஃப் போன்ற நெருக்கடியான போட்டியில் 189 ரன்கள் போன்ற பெரிய இலக்கை நிர்ணயித்தும் ராஜஸ்தான் தோல்வி அடைந்தது.

IPL 2022: Rajasthan Royals Loss ஆனதுக்கு Reasons என்ன? | Aanee's Appeal | #Cricket

அதுவும், குஜராத் அணியின் தொடக்க வீரர் சாஹாவை ஆட்டத்தின் 2 வது பந்திலேயே ராஜஸ்தான் வீழ்த்தியது.

ராயல்ஸ் சாதனை

ராயல்ஸ் சாதனை

அதுவும் இல்லாமல் பிளே ஆப் போட்டிகளில் கடைசி ஓவரில் 16 ரன்களை வெற்றிக்கரமாக குஜராத் அடித்து சாதனை படைத்தது. இதற்கு முன்பு கடந்த சிஎஸ்கே அணி டெல்லிக்கு எதிராக கடைசி ஓவரில் 13 ரன்கள் அடித்ததே சாதனையாக கருதப்படுகிறது. இந்த இடத்தில் தான் ராஜஸ்தான் அணி கோட்டை விட்டது.

ஃபில்டிங் தவறு

ஃபில்டிங் தவறு

பிரசித் கிருஷ்ணா கடைசி ஓவரில் தனது முதல் பந்தை டேவிட் மில்லருக்கு வீச இருந்தார். அப்போது, சஞ்சு சாம்சன், அனைத்து ஃபில்டர்களையும் மில்லருக்கு ஆஃப் சைடில் நிறுத்தினார். இதனால் லெக் சைடில் எந்த ஒரு ஃபில்டரும் நிறுத்தப்படவில்லை. இப்படி ஃபில்டரை நிறுத்தினாலே, பந்து ஓயிட்டாக தான் வரும் என்று பேட்ஸ்மேன்களுக்கு கணிக்க முடியும்.

ஹாட்ரிக் சிக்சர்

ஹாட்ரிக் சிக்சர்

ஆனால், பிரசித் கிருஷ்ணாவோ,பந்தை சரியாக லேக் சைடில் அடிப்பதற்கு ஏதுவாக அல்வா போன்ற பந்தை வீசினார். இதனை பயன்படுத்தி கொண்டு மிட் விக்கெட் பகுதியில் மில்லர் சிக்சர் அடித்தார். இதனால் பிரசித் கிருஷ்ணாவின் உத்வேகம் கலைந்தது. 2வது பந்துக்கு இரண்ட புறமும், எல்லைக்கோட்டில் ஃபில்டர்கள் நிற்க, அந்த பந்தும் சிக்சருக்கு பறந்தது. இதே போன்று மூன்றாவது பந்தையும் எந்த நெருக்கடியும் இல்லாமல் சிக்சருக்கு அடித்தார் மில்லர்.

விமர்சனம்

விமர்சனம்

இது குறித்து பேசிய சைமன் டுல், முதல் பந்துக்கு நிறுத்தப்பட்ட ஃபில்டிங் செட் ஆப் சரியானது தான் ஆனால் பந்துவீச்சாளர் பிளானை தவறாக நடைமுறைப்படுத்தி விட்டதாக கூறினார். இதற்கு பதில் அளித்த இயன் பிஷப், ஒரு வேலை ராஜஸ்தான் வகுத்த பிளானை நடைமுறைப்படுத்தும் வகையில் பந்துவீச பிரசித் கிருஷ்ணாவுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். இந்த சூழ்நிலையில், பிளானை விட, நமது பலத்திற்கு ஏற்ப தான் பந்துவீச வேண்டும் என்று கூறினார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL Playoffs 2022- Reason for the Loss of RR vs GT in final over ராஜஸ்தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன? எங்கே சொதப்பினார் கேப்டன் சஞ்சு சாம்சன்?
Story first published: Wednesday, May 25, 2022, 9:23 [IST]
Other articles published on May 25, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X