For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ப்ளே ஆஃப் ரத்தானால் என்ன ஆகும்??.. கடும் மழைப்பொழிவு.. ரிசர்வ் டே-காக பிசிசிஐ எடுத்த முடிவு!

மும்பை: ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுகளுக்காக பிசிசிஐ பிடிவாத முடிவுடன் இருந்து வருகிறது.

Recommended Video

IPL 2022 Playoffs நடக்குமா? மிரட்டும் Kolkata Weather Report | #Cricket

ஐபிஎல் 15வது சீசன் தற்போது ப்ளே ஆஃப் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி முதல் குவாலிஃபயர் போட்டியில் இன்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

ஐபிஎல் பிளே ஆஃப்பில் சாதனைகள்.. அதிக ரன்கள், அதிக வெற்றி பெற்றவர்கள் யார்..? முழு விவரம் இதோஐபிஎல் பிளே ஆஃப்பில் சாதனைகள்.. அதிக ரன்கள், அதிக வெற்றி பெற்றவர்கள் யார்..? முழு விவரம் இதோ

கடும் மழைப்பொழிவு

கடும் மழைப்பொழிவு

ஆனால் இந்த மைதானமே தற்போது இப்போட்டிக்கு எமனாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களாக கொல்கத்தாவில் கனமழை பெய்து வந்த சூழலில், இன்றும் காலையில் இருந்து கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. மாலை நேரத்தில் சற்று மழை நின்றபோதும், போட்டியின் போது குறுக்கிடலாம் என்ற அச்சம் உள்ளது.

 போட்டி ரத்தானால்

போட்டி ரத்தானால்

இந்நிலையில் இந்த முக்கிய போட்டி ஒருவேளை ரத்தாகிவிட்டால், என்ன நடக்கும் என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். இரவு 9.40 மணி வரை முழு போட்டியையும் நடத்த பொறுமை காக்கப்படும். நேரம் தாண்டிவிட்டால், குறைந்தபட்சம் 5 ஓவர் கொண்ட போட்டியாக நடத்துவார்கள். ஆனால் அதுவும் இரவு 11.56 மணிக்குள் தொடங்கப்பட வேண்டும். இல்லையென்றால் ஒரே ஒரு சூப்பர் ஓவருக்காக காத்திருப்பார்கள்.

 கடைசி கட்ட முடிவு

கடைசி கட்ட முடிவு

நள்ளிரவு 12.50 மணி வரை சூப்பர் ஓவருக்காக காத்திருக்க கூடும். அதில் அரை மணி நேரத்திற்குள் முடிவு தெரிந்துவிடும். ஆனால் மழை கொஞ்சம் கூட கருணை காட்டவில்லை எனில் ஒட்டுமொத்த ஆட்டமும் ரத்து செய்யப்படும். எனினும் அதற்காக ரிசர்வ் டே ( மற்றொரு நாள் ) தரப்பட மாட்டாது என பிசிசிஐ திட்டவட்டமாக கூறிவிட்டது.

 யார் தான் வெற்றியாளர்?

யார் தான் வெற்றியாளர்?

கடந்த 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அதிக வெற்றிகளை பெற்று முதலிடத்தில் இருக்கும் அணி தான் வெற்றி என அறிவிக்கப்படும். அந்த வகையில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி 20 புள்ளிகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

Story first published: Tuesday, May 24, 2022, 19:13 [IST]
Other articles published on May 24, 2022
English summary
What happens if IPL playoff is washed out? ( ஐபிஎல் ப்ளே ஆஃப் ரத்தானால் என்ன ஆகும்? ) குஜராத் vs ராஜஸ்தான் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் முதல் ப்ளே ஆஃப் போட்டி ரத்தானால் என்ன ஆகும் என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X