இதை பார்க்கத்தான் அவ்வளவு தூரம் வந்தேனா? செம கோபத்தில் பஞ்சாப் ஓனர் பிரீத்தி ஜிந்தா.. பரபரப்பு!

துபாய்: நேற்று டெல்லிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது குறித்து பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி திரில்லிங் வெற்றி பெற்றது. சூப்பர் ஓவர் வரை போட்டி நீண்டு, மிகவும் திரில்லாக போட்டி முடிந்தது. சூப்பர் ஓவரில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே பஞ்சாப் எடுத்து டெல்லியிடம் தோல்வியை தழுவியது.

ஆனால் இந்த போட்டியில் நடுவர் செய்த தவறான முடிவு ஒன்றால்தான் பஞ்சாப் தோல்வி அடைந்தது என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. நடுவர் சரியாக செயல்பட்டு இருந்தால், சூப்பர் ஓவரே முதலில் நடந்து இருக்காது என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

யாருப்பா இது? 21 பந்தில் 53 ரன்.. கடைசி ஓவரில் நடந்த சம்பவம்.. பஞ்சாப்பை கதற வைத்த டெல்லி வீரர்!

என்ன என்ன நடந்தது

என்ன என்ன நடந்தது

நேற்று டெல்லி அணியின் வீரர் ரபாடா 19வது ஓவரை வீசி வந்தார். அவரின் 3வது பந்தில், மயங்க் அகர்வால் பந்தை அகர்வால் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடைத்துவிட்டு இரண்டு ரன்கள் ஓடினார். ஆனால் அதில் ஒரு ரன் ஷார்ட் ரன் என்று நடுவர் தீர்ப்பு அளித்தார். இதனால் அப்போது ஒரு ரன் மட்டுமே பஞ்சாப் அணிக்கு வழங்கப்பட்டது. மைதானத்தில் இருந்த நடுவரின் நிதின் மேனன்தான் இந்த முடிவை எடுத்தது.

காரணம் காரணம் இதுதானா

காரணம் காரணம் இதுதானா

இதனால் போட்டி கடைசி ஒரு ரன் வித்தியாசத்தில் டை ஆகி சூப்பர் இவருக்கு சென்று, அது டெல்லி வெற்றிக்கு காரணமாக மாறியது. ஆனால் அதன்பின் செய்யப்பட்ட ரீ கேப் வீடியோக்களில்தான் நடுவர் தவறாக முடிவு எடுத்தது தெரிந்தது. அகர்வால் இரண்டு ரன்கள் எடுத்தார். இதில் ஷார்ட் ரன் எதுவும் இல்லை. இதனால் தற்போது நடுவரின் தீர்ப்பிற்கு எதிராக பலரும் கொதித்தெழுந்து உள்ளனர்.

 கருத்து என்ன கருத்து

கருத்து என்ன கருத்து

பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது குறித்து பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். பிரீத்தி ஜிந்தா அதில், நான் கொரோனாவிற்கு இடையே ஆசையோட பயணமா செய்து அமீரகம் வந்தேன். என்னை 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டேன். அதோடு 5 முறை கொரோனா சோதனை செய்து கொண்டேன். அனைத்தையும் சந்தோசமாக செய்தேன். ஆனால் ஒரே ஒரு ஷார்ட் ரன், நடுவரின் முடிவு என்னை நிலை குலைய வைத்துவிட்டது.

திருப்தி இல்லை

திருப்தி இல்லை

நடுவரின் முடிவில் எனக்கு திருப்தி இல்லை. ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியவில்லை என்றால் அதை வைத்துக் கொண்டு என்ன பயன். பிசிசிஐ உடனே புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. எல்லா வருடமும் இதே போல சம்பவங்கள் நடக்க கூடாது, என்று மிகவும் கோபமாக பிரீத்தி ஜிந்தா நேற்றைய போட்டி குறித்து குறிப்பிட்டுள்ளார்.

பலர் பலர் கோபம்

பலர் பலர் கோபம்

பிரீத்தி ஜிந்தா மட்டுமின்றி பல்வேறு பிரபலங்கள் நேற்றைய போட்டியை பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஏன் நடுவர் இப்படி தவறு செய்தார். நடுவர் தவறு செய்யாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக பஞ்சாப் அணிதான் வென்று இருக்கும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. உடனே இதற்கு எதிராக நடவடிக்கை தேவை என்று இவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL: Preiti Zinda gets angry about Punjab vs Delhi match result and umpire faults.
Story first published: Monday, September 21, 2020, 12:04 [IST]
Other articles published on Sep 21, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X