For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சஞ்சு சாம்சனுக்கு அவர் தான் எதரி.. கோலிக்கு காத்திருக்கும் கண்டம்.. ஆகாஷ் சோப்ரா கருத்து

அமதாபாத்: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் குவாலிபையர் 2 ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா அலசி முக்கிய கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார்.

இதில், ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் திறமையான வீரராக அறியப்பட்டாலும், அவருக்கு பிரச்சினையே அவர் தான் என்று கூறி இருக்கிறார்.

சிஎஸ்கேக்கு விசில் போடுங்க..IPL வரலாற்றின் சிறந்த கம்பேக் நிகழ்ந்த தினம் இன்று..சபதம் நிறைவேறிய நாள்சிஎஸ்கேக்கு விசில் போடுங்க..IPL வரலாற்றின் சிறந்த கம்பேக் நிகழ்ந்த தினம் இன்று..சபதம் நிறைவேறிய நாள்

சஞ்சு சாம்சனே எதிரி

சஞ்சு சாம்சனே எதிரி

ஹசரங்கா பந்துவீச்சில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து ஆட்டமிழந்து விடுகிறார். அதற்கு காரணம் சஞ்சு சாம்சன் தான், நீ யாராக இரந்தாலும் சரி, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, உன் பந்துவீச்சை நான் அடிப்பேன் என அதிரடி காட்ட நினைத்து விக்கெட்டை இழக்கிறார் அதற்கு பதில் ஹசரங்கா ஓவரில் அமைதி காத்துவிட்டு, மற்றவர்கள் பந்துவீச்சில் அடிக்கலாம். சஞ்சு சாம்சன் தனக்குள் போராடி வென்றாலே வெற்றி கிடைக்கும்.

கோலிக்கு கண்டம்

கோலிக்கு கண்டம்

விராட் கோலி குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் கோலி 2 முறை ஆட்டமிழந்து இருக்கிறார். பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சை மட்டும் அவர் பத்திரமாக எதிர்கொண்டால் பிறகு அவர் ரன் அடிக்கலாம். சாஹலும் கோலிக்கு சிக்கலை உண்டாக்கலாம். ஏனெனில் இருவரும் ஒரே அணியில் இருந்ததால், ஒருவரை ஒருவர் அதிகமாக போட்டியில் எதிர்கொண்டது இல்லை. இதனால் அவர்களுக்குள் நடக்கும் பந்தயத்தையும் பார்க்க வேண்டும்.

காத்திருக்கும் சவால்

காத்திருக்கும் சவால்

டுபிளஸிஸ்க்கு எப்போதுமே இடது கை வேகப்பந்துவீச்சாளரால் சிக்கல் உள்ளது. கடந்த போட்டியில் கூட மோஷின் கான் பந்துவீச்சில் தான் டுபிளஸிஸ் டக் அவுட் ஆனார். இதே போன்று மார்கோ யான்சனும் டுபிளஸிஸ்க்கு தலை வலியை தந்துளளார். இதனால் இன்றைய ஆட்டத்தில் பவுல்ட், டுபிளஸிஸ்க்கு சிம்ம சொப்பனமாக இருக்க வாய்ப்புள்ளது.

எச்சரிக்கை தேவை

எச்சரிக்கை தேவை

ஜாஸ்பட்லர் பொறுத்தவரை, அவர் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ரன் குவிக்க வேண்டுமே தவிர ஆங்கர் ரோல் செய்ய கூடாது. இதே போன்று மேக்ஸ்வெல் சாஹல் பந்துவீச்சை அதிரடியாக ஆடி ரன் குவிக்க முய்றசி செய்வார். ஆனால் அது சில சமயம் வெற்றியை தந்தாலும், சில சமயம் ஆபத்தில் கூட முடியலாம் என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.

Story first published: Friday, May 27, 2022, 14:14 [IST]
Other articles published on May 27, 2022
English summary
IPL Qualifier 2 – Aakash chopra on RCB vs RR Match insights சஞ்சு சாம்சனுக்கு அவர் தான் எதரி.. கோலிக்கு காத்திருக்கும் கண்டம்.. ஆகாஷ் சோப்ரா கருத்து
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X