சூப்பர் மேன் போல் பாய்ந்த அஸ்வின்.. டுபிளஸிசை திட்டம் போட்டு தூக்கிய சாம்சன்.. ஆர்சிபிக்கு ஏமாற்றம்

அகமதாபாத்: ஐபிஎல் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் கேப்டன் டுபிளஸிஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாசை இழந்த பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

“இவ்வளவு நடந்துச்சா” கே.எல்.ராகுலுக்காக 3 ஓவர்களாக டூப்ளசிஸ் போட்ட ஸ்கெட்ச்.. தோனியையே மிஞ்சிட்டார்“இவ்வளவு நடந்துச்சா” கே.எல்.ராகுலுக்காக 3 ஓவர்களாக டூப்ளசிஸ் போட்ட ஸ்கெட்ச்.. தோனியையே மிஞ்சிட்டார்

இன்றைய முக்கிய ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, டுபிளஸிஸ், மேக்ஸ்வெலை ரசிகர்கள் வெகுவாக நம்பி இருந்தனர்.

கேப்டன்சி சுமை

கேப்டன்சி சுமை

விராட் கோலி 7 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் டுபிளஸிஸ், ரஜத் பட்டிதார் ஆகியர் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். பட்டிதார் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். ஆனால் மறுபுறத்தில் இரந்த கேப்டன் டுபிளஸிஸ் ரன்களை சேர்க்க தடுமாறினார். சிஎஸ்கேவில் இருக்கும் போது அதிரடி காட்டிய டுபிளசிஸ்க்கு, கேப்டன் பொறுப்பால் ஏற்பட்ட சுமை பேட்டிங்கை பாதித்தது தெளிவாக தெரிந்தது.

டுபிளசிஸ் குறை

டுபிளசிஸ் குறை

மேலும் டுபிளஸிஸ்க்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமம் இருந்ததாக நமது மைக்கேல் தளத்தில் குறிப்பிட்டு இருந்தோம். கடந்த போட்டியில் கூட மோஷின் கானிடம் டுபிளஸிஸ் ஆட்டமிழந்தார். இதனால் டுபிளஸிஸ் பேட்டிங் செய்யும் போது இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மேக்காயை பந்துவீச அழைத்தார் சஞ்சு சாம்சன்.

அஸ்வின் அபார கேட்ச்

அஸ்வின் அபார கேட்ச்

டுபிளஸிஸ் 27 பந்துகளில் 25 ரன்கள் அடித்திருந்த போது, மெக்காய் வீசிய பந்தை அடிக்க முயன்று, அது எட்ஜ் ஆனது அப்போது ஷாட் தெர்த் மேன் பகுதியில் நின்ற அஸ்வின் சூப்பர் மேன் போல் பாய்ந்து கேட்ச் பிடித்தார். இதனால் டுபிளஸிஸ் அவுட்டாகினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 100க்கு கீழ் இருந்தது.

திணறிய மேக்ஸ்வெல்

திணறிய மேக்ஸ்வெல்

இதே போன்று மேக்ஸ்வெல் அஸ்வின் பந்துவீச்சை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் பவுல்டை பந்துவீச சஞ்சு சாம்சன் அழைத்தார். பவுல்ட் பந்துவீச்சின் வேகத்தை குறைந்து பந்துவீச, அதனை அடிக்க முடியாமல் மேக்ஸ்வெல் திணறினார். இதனால் கவன சிதறல் ஏற்பட்டு மேக்ஸ்வெல் அடித்த பந்தை Fine leg திசையில் நின்ற மெக்காய் அபாரமாக கேட்ச் பிடித்து ஆட்டமிழந்தார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL Qualifier 2 – Ashwin superb catch dismisses the RCB Captain faf duplessis சூப்பர் மேன் போல் பாய்ந்த அஸ்வின்.. டுபிளஸிசை திட்டம் போட்டு தூக்கிய சாம்சன்.. ஆர்சிபிக்கு ஏமாற்றம்
Story first published: Friday, May 27, 2022, 21:17 [IST]
Other articles published on May 27, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X