ஆர்சிபியை வச்சு செய்யும் மீம்ஸ்.. ஓவர் ஆட்டத்துக்கு பதிலடி.. 100 சதவீதம் சிரிப்பு உறுதி

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்ட ஆர்சிபி அணி தோல்வியை தழுவியது.

Rr vs RCB Jos Buttler ருத்ர தாண்டவம்! RCB தோற்றது எப்படி? | #Cricket

இதன் மூலம் நட்சத்திர வீரர்கள், ரசிகர்கள் பட்டாளம் இருந்தும் ஆர்சிபி அணி தொடர்ந்து ஒரு முறை கூட கோப்பை வெல்லாமல் தோல்வியை தழுவி வருகிறது.

இதனால் ஆர்சிபியின் உண்மையான ரசிகர்களே , அந்த அணியை கழுவி ஊற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஆர்சிபியை கலாய்த்து இணையத்தில் வரும் மீம்ஸ் குறித்து தற்போது காணலாம்.

ஆர்சிபி தோற்றது எதனால்?? போட்டியில் நடந்த 2 முக்கிய தவறுகள்.. டூப்ளசிஸே ஒப்புக்கொண்ட உண்மை - விவரம் ஆர்சிபி தோற்றது எதனால்?? போட்டியில் நடந்த 2 முக்கிய தவறுகள்.. டூப்ளசிஸே ஒப்புக்கொண்ட உண்மை - விவரம்

கேஜிஎஃப் மீம்

கேஜிஎஃப் மீம்

கே.ஜி.எஃப் 2 படத்தில் வரும் சிறந்த காட்சி, ரசிகர்களிடையே மிகவும் கவர்ந்த ஒன்று. அதில் யாஷ் வைலன்ஸ் வைலன்ஸ் ஐ டோன்ட் லைக் இட், ஐ ஆவாய்ட் என்று வசனம் பேசுவார். தற்போது, அதில் யாஷ்க்கு பதிலாக விராட் கோலியின் முகத்தை போட்ட நெட்டிசன்கள், ஐபிஎல் கோப்பையை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனால் ஐபிஎல் கோப்பைக்கு தான் என்னை பிடிக்காது என்று கோலி சொல்வது போல் மீம் போட்டு வருகின்றனர்.

15 வருசம்

15 வருசம்

ஆர்சிபி ரசிகர்கள் பள்ளிக்கு போகும் போது, ஆர்சிபி தொடரை விட்டு வெளியேறியது என்ற செய்தியை பார்க்கிறார்கள். அதே போன்று கல்லூரி பருவத்திலும் ஆர்சிபி ரசிகர்கள், அணி வெளியேறுவதை பார்ப்பது போலவும், வயதான பிறகும் ஆர்சிபி அணி வெளியேறுவதை பார்ப்பது போலவும் மீம்ஸ் போட்டு இருக்கிறார்கள்.

இதயத்தை வென்றது

இதயத்தை வென்றது

ஐபிஎல் தொடரில் மற்ற அணிகள் எல்லாம் கோப்பையை வெல்லும் போது அர்சிபி அணி மட்டும் இதயத்தை வென்றது என ஒவ்வொரு முறையும் அந்த அணி ரசிகர்கள் கூறுவார்கள். அவர்களை கிண்டல் செய்யும் விதமாக ஆர்சிபி அணி இதயம், கிட்னியை தான் பரிசாக வென்று இருப்பதை மீம்சாக போட்டு இருக்கிறார்கள். இன்னொரு மீமில் ஆர்சிபி அணியை பார்த்து விமான நிலையத்தில் சிஎஸ்கே கேட்பது போல் மாப்பிள்ளை கப் எங்கே என்ற மீம்சும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

100 வருசம்

100 வருசம்

ஆர்சிபி போட்டியின் போது ஒரு பெண், ஆர்சிபி கோப்பை வாங்காத வரை நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பதாகையை ஏந்தி இருப்பார். தற்போது அந்த பெண் 100 ஆண்டுகளுக்கு பிறகும் எலும்பு கூடாக அதே பதாகையை வைத்து இருப்பது போலவும் மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். இதே போன்று ஆஸ்கார் மேடையில் வில் ஸ்மித் அறைவது போல ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி தட்டிவிட்டு வருவதாகவும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.

வடிவேலு மீம்ஸ்

வடிவேலு மீம்ஸ்

ஆர்சிபியை வடிவேலு போலவும், இந்த கோப்பையை கொஞ்சம் தொட்டு பார்த்துக்கிறேன் என்று பெட்டி கடையில் அமர்ந்திருக்கும் கங்குலியிடம் கேட்பது போலவும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். இதே போன்று 15 ஆண்டுகளாக ஆர்சிபி அணி முதுகில் குத்துப்பட்டு வெளியேறுவதை போலவும் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். ( இது எல்லாம் நகைச்சுவைக்காக மட்டும் தான், சிரித்து விட்டு கடந்து செல்லுங்கள் ஆர்சிபி நண்பர்களே)

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL Qualifier 2 – Memes Fest by Netizens by trolling RCB and their fans ஆர்சிபியை வச்சு செய்யும் மீம்ஸ்.. ஓவர் ஆட்டத்துக்கு பதிலடி.. 100 சதவீதம் சிரிப்பு உறுதி
Story first published: Saturday, May 28, 2022, 12:43 [IST]
Other articles published on May 28, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X