ஐபிஎல் குவாலிபையர் 2 - ராஜஸ்தான், பெங்களூரு இன்று மோதல் - பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தப் போட்டி அகமதபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் வெல்லும் அணி ஞாயிற்றுகிழமை நடைபெறும் குஜராத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் பங்கேற்கும்.

ஐபிஎல் பிளே ஆப்க்கு ஏன் செல்லவில்லை.. ஷிகர் தவானை அடித்து உதைத்த தந்தை.. வீடியோ இதோஐபிஎல் பிளே ஆப்க்கு ஏன் செல்லவில்லை.. ஷிகர் தவானை அடித்து உதைத்த தந்தை.. வீடியோ இதோ

பிட்ச் ரிப்போர்ட்

பிட்ச் ரிப்போர்ட்

நரேந்திர மோடி மைதானம் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக செயல்படும். டாஸ் வென்றால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகம். 2021ஆம் ஆண்டிலிருந்து கணக்கில் எடுத்து கொண்டால் முதலில் பேட் செய்யும் அணி 6 முறை, 2வது பேட் செய்யும் அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இது பழைய மைதானமாக இருக்கும் போது ராஜஸ்தான் அணி, இங்கு 12 போட்டியில் விளையாடி 7 முறை வென்றுள்ளது.

ராஜஸ்தான் பலம்

ராஜஸ்தான் பலம்

ராஜஸ்தான் அணியில் பட்லர், சஞ்சு சாம்சன், படிக்கல், ஹேட்மயர், ஜெய்ஷ்வால் ஆகியோர் ரன்கள் அடித்தாலே ஆர்சிபிக்கு நெருக்கடி தர முடியும். பந்துவீச்சில் குவாலிபையர் 1 ஆட்டத்தில் ராஜஸ்தான் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. கடந்த ஆட்டத்தில் செய்த தவறை திருத்தி கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். பிரசித் கிருஷ்ணா, சாஹல் ஆகியோர் விக்கெட்டுகளை எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெங்களூரு பலம்

பெங்களூரு பலம்

முதல் 8 போட்டியில் 10 விக்கெட்டுகளை எடுத்த பிரசித் கிருஷ்ணா, அடுத்த 7 போட்டியில் 5 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். எக்னாமியும் 7 லிருந்து 9ஆக உயர்ந்துள்ளது. ஆர்சிபி அணியை பொறுத்தவரை விராட் கோலி, தினேஷ் கார்த்திக், டுபிளஸிஸ், மேக்ஸ்வெல் என அதிரடி பேட்டிங் வரிசையுடன் மிரட்டலாக காட்சி அளிக்கிறது. சீனியர்கள் சொதப்பினாலும் ரஜத் பட்டிடார் போன்ற ஜூனியர்கள் அதிரடியாக விளையாடி கை கொடுக்கின்றனர்.

ஆர்சிபி Vs ராஜஸ்தான்

ஆர்சிபி Vs ராஜஸ்தான்

இது போன்ற முக்கிய போட்டியில் டுபிளஸிசும், கோலியும் பெரிய இன்னிங்ஸ் ஆடக் கூடியவர்கள். பந்துவீச்சிலும் ஹசரங்கா, ஹர்சல் பட்டேல், ஹேசல்வுட் ஆகியோர் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார்கள். சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும். நடப்பு சீசனில் இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் ஆர்சிபி, ராஜஸ்தான் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

ஆர்சிபி 1, டுபிளஸில், 2, விராட் கோலி, 3, ரஜத் பட்டிடார், 4. மேக்ஸ்வெல். 5. லோம்ரர், 6. தினேஷ் கார்த்திக், 7. ஷபாஷ் அகமது. 8. ஹசரங்கா, 9, ஹர்சல் பட்டேல். 10. முகமது சிராஜ். 11. ஹேசல்வுட்

ராஜஸ்தான். 1. ஜாஸ் பட்லர், 2. ஜெய்ஷ்வால். 3. சஞ்சு சாம்சன், 4.படிக்கல். 5. ஹிட்மயர். 6. ரியான் பராக். 7. அஸ்வின். 8. சாஹல். 9. பவுல்ட். 10. பிரசித் கிருஷ்ணா. 11. மெக்காய்

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL Qualifier 2 – Rajasthan Vs Bangalore match preview- Playing xi and pitch report ஐபிஎல் குவாலிபையர் 2 - ராஜஸ்தான், பெங்களூரு இன்று மோதல் - பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
Story first published: Friday, May 27, 2022, 9:56 [IST]
Other articles published on May 27, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X