For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆர்சிபி அணியை வெளுத்து வாங்கிய சச்சின் பட்லருக்கு இப்படி பந்துவீசி இருக்கனும்.. டெண்டுல்கர் அட்வைஸ்

மும்பை: ஐபிஎல் குவாலிபையர் 2 போட்டியில் பெங்களூரு அணி அடித்த 157 ரன்கள் பத்தவே பத்தாது என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இது குறித்து தனது யூ டியூப் சேனலில் பேசிய சச்சின், ராஜஸ்தான் அணியில் மெக்காய் மற்றும் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக பந்துவீசியதாக பாராட்டினார்.

தினேஷ் கார்த்திக் இந்த சீசனில் சிறப்பாக விளையாடியதாக குறிப்பிட்ட சச்சின், அவரது விக்கெட்டை வீழ்த்திய பிரசித் கிருஷ்ணா,

பட்லரின் ருத்ர தாண்டவம்.. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு சென்றது ராஜஸ்தான் அணி.. ஆர்சிபி தோற்றது எப்படி?? பட்லரின் ருத்ர தாண்டவம்.. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு சென்றது ராஜஸ்தான் அணி.. ஆர்சிபி தோற்றது எப்படி??

நல்ல ஸ்கோர் கிடையாது

நல்ல ஸ்கோர் கிடையாது

அடுத்த பந்திலேயே ஹசரங்கா விக்கெட்டையும் சூப்பராக பந்துவீசி வீழ்த்தியதாக சச்சின் பாராட்டினார். அகமதாபாத் ஆடுகளத்தில் 157 ரன்கள் என்பது போதுமான ஸ்கோர் கிடையாது என்று சச்சின் அறிவுறுத்தினார். பந்து ஒரே ஒரு திசையில் மட்டும் நகர்ந்தால் பந்தை அடிக்காமல் எளிதில் விட்டு விடலாம். ஆனால் பிரசித் ஒரு பந்தை ஸ்டம்பை நோக்கி போட அது விராட் கோலியின் காலில் பட்டது.

பட்டிதார், கிருஷ்ணாவுக்கு பாராட்டு

பட்டிதார், கிருஷ்ணாவுக்கு பாராட்டு

இதனால் அடுத்த பந்தை விட பேட்ஸ்மேன்கள் யோசிப்பார்கள், அந்த நேரத்தில் நல்ல பவுன்சாகவும், அதே நேரம் ஸ்டம்ப்க்கு வெளியேயும் பந்துவீசியதால் அதனை அடிக்க முற்பட்டு கோலி ஆட்டமிழந்தவிட்டதாக சச்சின் குறிப்பிட்டார். ஆடுகளம் வேகத்துக்கும், பவுன்ஸ்க்கும் சாதகமாக இருக்கும் போது அடிப்பது சிரமம்.ஆனால் பிரசித் கிருஷ்ணா ஓவரில் 2 பவுண்டரியை அடித்தார் ரஜத் பட்டிதார். அமைதியாக களத்தில் நின்று அவர் செயல்பட்டது எனக்கு பிடித்தது.

சிராஜ் செய்த தவறு

சிராஜ் செய்த தவறு

முகமது சிராஜ் பந்துவீச்சை ஜெய்ஷ்வால் அடித்த விதம், பட்லருக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுத்திருக்கும். அதன் பிறகு தான் சிராஜ் பந்துவீச்சை பட்லர் அடிக்க ஆரம்பித்தார். இந்த இடத்தில் தான் சிராஜ், ஒரு தவறு செய்துவிட்டார். சிராஜ் ஒரு அவுட் ஸ்விங் பந்தை பட்லருக்கு வீசி இருக்க வேண்டும். ஆனால் அவர் தொடர்ந்து கிராஸ் சீம் பந்தை இன் கட்டர்சாக போட்டு வாய்ப்பை வீணடித்துவிட்டார்.

தேவையில்லாத ஷாட்

தேவையில்லாத ஷாட்

பட்லர் ரன் அடிக்க தொடங்கிவிட்டால் பார்ப்பதற்கு அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். பட்லர் ஒரு 360 டீகிரி வீரர். பேட்டை நன்றாக விளாசுவார். பார்ட்னர்ஷிப்பையும் உருவாக்குவதில் வல்லவர். சஞ்சு சாம்சன் ஹசரங்கா ஓவரில் தேவையில்லாத வகையில் ஒரு ஷாட் ஆடி அவுட்டாகி இருக்கிறார். அவர் அதனை ஆடாமல் இருந்திருந்தால் போட்டி இன்னும் சீக்கிரமே முடிந்திருக்கும்.

Story first published: Saturday, May 28, 2022, 23:23 [IST]
Other articles published on May 28, 2022
English summary
IPL Qualifiers 2 – Sachin Tendulkar Praises RR Team and Slams RCB ஆர்சிபி அணியை வெளுத்து வாங்கிய சச்சின்.. பட்லருக்கு இப்படி பந்துவீசி இருக்கனும்.. சச்சின் அறிவுரை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X