அடி இல்ல ஒன்னொன்னும் இடி.. சாதனை செய்த குயின்டன் டி காக், ராகுல் ஜோடி.. 140 ரன்கள் விளாசிய டிகாக்

மும்பை: ஐபிஎல் தொடரின் 66வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் பலப்பரீட்சை நடத்தியது.

இதில் லக்னோ வென்றால் முதல் 2 இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. கொல்கத்தா அணி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்க இந்தப் போட்டியில் வென்று ஆக வேண்டும்.

இந்த நிலையில், டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல், டி காக் ஜோடி ருத்ரதாண்டவம் ஆடினர்.

முதலில் பொறுமை

முதலில் பொறுமை

ஆட்டம் தொடங்கியதும் இருவரும் விக்கெட்டை இழந்து விடக் கூடாது என்ற நோக்கில் பொறுமையாக விளையாடினர். 7.2வது ஓவரில் தான் லக்னோ அணியின் ஸ்கோரே 50 ரன்களை தொட்டது என்றால் பார்த்து கொள்ளுங்கள். என்னபா மெதுவாக விளையாட்றாங்க என்று நினைத்து டிவியை ஆஃர் செய்தவர்கள் எல்லாம் பெரிய தப்பு பண்ணிட்டோம் என்று ஏங்க வைத்துவிட்டனர் இந்த ஜோடி.

ராகுல் சாதனை

ராகுல் சாதனை

அதன் பின்னர், சிக்சா, பவுண்டரி என விராட்டிய டி காக் 36 பந்தில் அரைசதம் அடிக்க, மறுபுறம் பொறுமையாக ஆடிய ராகுல் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் 12.4வது ஓவரில் லக்னோ அணி 100 ரன்களை எட்டியது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் வரிசையாக 5 சீசனில் 500 ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை ராகுல் பெற்றார்.

டிகாக் அதிரடி சதம்

டிகாக் அதிரடி சதம்

இதன் பின்னர், இந்த ஜோடி ரன் குவிக்கும் வேகத்தை அதிகரித்தது, சிக்சர் சிக்கசராக பறக்கவிட்ட குயின்டன் டி காக் 59 பந்துகளில் சதம் விளாசினார். அதுவரை டி காக்கிற்கு நல்ல கம்பெனி கொடத்த ராகுலும் சில சிக்சர்களை பறக்கவிட்டார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் கொல்கத்தா அணி வீரர்கள் திணறினர்.

லக்னோ சாதனை

லக்னோ சாதனை

கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற குயின்டன் டி காக் 70 பந்துகளில் 140 ரன்கள் விளாசினார். இதில் 10 பவுண்டரியும், 10 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் கெயில், மெக்குல்லம்க்கு பிறகு அடித்த தனநபர் அதிகபட்ச ஸ்கோர் அடித்தவர் என்ற பெருமையை டி காக் படைத்தார். ராகுல் 51 பந்துகளில் 68 ரன்கள் எடுக்க, லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 210 ரன்கள் விக்கெட்டுகளை இழக்காமல் அடித்தது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL – Quinton De Kock smashed 140 Runs Put Lucknow in strong position சாதனை செய்த குயின்டன் டி காக், ராகுல் ஜோடி.. 140 ரன்கள் விளாசிய டிகாக்
Story first published: Wednesday, May 18, 2022, 22:00 [IST]
Other articles published on May 18, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X