For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கெட்ட வார்த்தை பேசி சர்ச்சையில் சிக்கிய கே.எல் ராகுல்.. நடுவருடன் வேறு மோதல்.. நடவடிக்கை பாய்கிறதா?

துபாய்: டெல்லிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல் தனது அணியின் சக வீரர்களிடம் கெட்ட வார்த்தை பேசியது அவருக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஐபிஎல் தொடரின் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், தொடர் இப்போதே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னைக்கும் - மும்பைக்கு இடையில் முதல் போட்டி பல திருப்பங்களுடன் முடிந்தது. இந்த நிலையில் டெல்லி பஞ்சாப் - போட்டியும் சூப்பர் ஓவர் வரை சென்றது.

அதன்பின் நேற்றைய போட்டியிலும் கூட ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி அளித்து, கடைசி கட்டத்தில் பெங்களூர் அணி சுவாரசிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில்தான் பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல் முக்கியமான சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார்.

சர்ச்சை சிக்கினார்

சர்ச்சை சிக்கினார்

நேற்று முதல் நாள் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதில் போட்டி இறுதிவரை விறுவிறுப்பாக சென்றது. கடைசியில் போட்டி டை ஆனது. பின் சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்த போட்டியில் தொடக்கத்தில் பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல் கொஞ்சம் பதற்றமாக இருந்தார். தனது அணி வீரர்களை கோபமாக திட்டிக் கொண்டு இருந்தார். இந்த நிலையில்தான் நேற்று நடந்த போட்டியில் கே எல் ராகுல் கெட்ட வார்த்தையில் பேசினார். பீல்டிங் செட் செய்து கொண்டு இருந்த போது வீரர்களை பார்த்து, இங்க வாடா என்று கன்னடத்தில் கூறி அதோடு சேர்த்து சில கெட்ட வார்த்தைகளையும் குறிப்பிட்டார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இரண்டு, மூன்று முறை இந்த வார்த்தையை அவர் பயன்படுத்தினார். கோபமாக பல இடங்களில் வீரர்களை திட்டினார். அணியில் பல கர்நாடகாவை சேர்ந்த வீரர்கள் இருப்பதால், அவர் கன்னடத்தில் சக வீரரை திட்டினார். இதுதான் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. நேற்று கெட்ட வார்த்தை சொன்னவுடன் தனது தவறை உணர்ந்தவர், உடனே தனது வாயை மூடிக்கொண்டார்.

மைக் கேட்க கூடாது

மைக் கேட்க கூடாது

தான் சொல்லியது மைக்கில் கேட்க கூடாது இவர் வாயை மூடிக்கொண்டார். ஆனால் இது மைக்கில் பதிவாகி விட்டது. இந்த நிலையில் இவருக்கு எதிராக நடுவர்கள் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக வீரர்கள் பலர் களத்தில் கெட்ட வார்த்தை பேசுவது வழக்கம். அதற்கு எல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டது இல்லை. ஆனால் கேஎல் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழ காரணம் இருக்கிறது.

ஏன்

ஏன்

தற்போது பஞ்சாப் அணிக்கும் ஐபிஎல் நடுவர் குழுவிற்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது. டெல்லி - பஞ்சாப் போட்டியில் பஞ்சாப் வீரர் மயங்க் அகர்வால் இரண்டு ரன் எடுத்த போது, அதில் ஒரு ரன் ஷார்ட் ரன் என்று நடுவர் தீர்ப்பு அளித்தார். இதனால் அப்போது ஒரு ரன் மட்டுமே பஞ்சாப் அணிக்கு வழங்கப்பட்டது. மைதானத்தில் இருந்த நடுவரின் நிதின் மேனன்தான் இந்த முடிவை எடுத்தது.இதனால் போட்டி டை ஆனது. அதோடு சூப்பர் ஓவர் வரை போட்டி சென்று, அதில் பஞ்சாப் தோல்வி அடைந்தது.

தோல்வி அடைந்தது

தோல்வி அடைந்தது

பஞ்சாப் தோல்வி அடைய நடுவரின் முடிவே காரணமாக இருந்தது. இதனால் ஐபிஎல் நடுவர்களுக்கு எதிராக பஞ்சாப் அணி நிர்வாகம் பிசிசிஐ அமைப்பில் புகார் அளித்துள்ளது. இதனால் நடுவர் குழுவும் பஞ்சாப் அணியின் மீது கோபத்தில் உள்ளது. இந்த மோதல் காரணமாக தற்போது கே எல் ராகுல் பழி வாங்கப்பட வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Tuesday, September 22, 2020, 12:41 [IST]
Other articles published on Sep 22, 2020
English summary
IPL: Rahul may face actions for speaking unparliament words during the match yesterday against Delhi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X