For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிராவிட் கைகாட்டிய குட்டி பையன்.. கும்ப்ளேவை வியக்க வைத்த பவுலிங் ஸ்டைல்..ஐபிஎல் புது ஹீரோ இவர்தான்

துபாய்: நேற்று டெல்லிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் வீரர் ரவி பிஷ்னோய் பவுலிங் பலரையும் கவர்ந்து உள்ளது. இவரை இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்று இப்போதே பலரும் குரல் கொடுக்க தொடங்கிவிட்டனர்.

நேற்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மிகவும் பரபரப்பாக சென்றது. கடைசி நொடி வரை திக் திக் என்று சென்ற போட்டி, கடைசி நொடியில் சூப்பர் ஓவர் வரை சென்று அதன்பின் முடிந்தது.

முதலில் ஆடிய டெல்லி அணி 157 ரன்கள் எடுத்தது. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 157 ரன்கள் எடுத்து போட்டி டை ஆனது. அதன்பின் சூப்பர் ஓவரில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே பஞ்சாப் எடுத்து டெல்லியிடம் தோல்வியை தழுவியது.

தோல்வி அடையாளம்

தோல்வி அடையாளம்

இந்த போட்டியில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும், அந்த அணி சிறந்த பவுலர் ஒருவரை இந்தியாவிற்கு அடையாளம் காட்டி உள்ளது. நேற்று பஞ்சாப் அணிக்காக பவுலிங் செய்த, ரவி பிஷ்னோய் என்ற இளம் வீரர் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். நேற்று நடந்த போட்டியில்தான் இவர் அறிமுகம் ஆனார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

வாய்ப்பு வழங்கப்பட்டது

வாய்ப்பு வழங்கப்பட்டது

நேற்று பவுலிங்கில் இவர் ஒரு விக்கெட்தான் எடுத்தார். 4 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்தார். ஷமிக்கு அடுத்தபடி, இவர்தான் நேற்று நல்ல எக்கனாமி வைத்து இருந்தார். இந்த போட்டியில் ரவி பிஷ்னோய் செய்த பவுலிங் பலரையும் கவர்ந்தது. 4 ஓவர்களில் இவர் நல்ல வெரைட்டி காட்டினார். ரைட் ஆர்ம் லெக் ஸ்பின்னர் இவர் என்பதால் நேற்றைய போட்டியில் இவருக்கு பிட்ச் மிகவும் சாதகமாக இருந்தது.

விக்கெட் எடுத்தார்

விக்கெட் எடுத்தார்

இவர் ஒரு விக்கெட் எடுத்து இருந்தாலும், டெல்லி அணியின் முக்கியமான வீரர்கள் யாரும் இவர் ஓவரில் அடிக்க முடியாமல் திணறினார்கள். அதிலும் ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் பார்ட்னர்ஷிப்பை உடைக்க இவர்தான் காரணமாக இருந்தார். அதேபோல் டெல்லி அணியின் வலுவான வீரர்கள் யாரும் இவர் பந்தை அடித்து ஆட முடியாமல் கஷ்டப்பட்டனர்.

ஸ்விங் செய்தார்

ஸ்விங் செய்தார்

முதல் பந்தில் இருந்தே இவர் ஸ்விங் செய்த விதம் பலரையும் ஈர்த்தது. இந்த நிலையில் இவர் பவுலிங்கை போட்டிக்கு ஸ்பின் லெஜண்ட் அணில் கும்ப்ளே பாராட்டி இருக்கிறார். கும்ப்ளேதான், பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். இதனால் அடுத்த போட்டியிலும் ரவி கண்டிப்பாக அணியில் இருப்பார் என்று கூறுகிறார்கள். அஸ்வின் இடத்தை பஞ்சாப் அணியில் இவர்தான் நிரப்ப போகிறார்.

அண்டர் 19 வீரர்

அண்டர் 19 வீரர்

இவர் இந்திய அண்டர் 19 அணிக்காக விளையாடினார். கடந்த அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் இவர் 17 விக்கெட்டுகளை வெறும் 6 போட்டியில் எடுத்தார். அந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரர் இவர்தான். அப்போதே இவர் பெரிய அளவில் இந்திய கிரிக்கெட் உலகில் கவனம் ஈர்த்தார்.

பஞ்சாப் அணி எப்படி

பஞ்சாப் அணி எப்படி

அதன்பின் பஞ்சாப் அணி இவரை 2 கோடிக்கு எடுத்தது. கடந்த வருடம் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அப்படி இருக்கையில் இந்த வருடம் முதல போட்டியிலேயே இவர் சிறப்பாக விளையாடி உள்ளார். இவர் ராகுல் டிராவிட்டின் நேரடி பயிற்சியின் கீழ் வளர்ந்தவர். அப்போதே ராகுல் டிராவிட் இவரை பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தானை சேர்த்த இந்த இளைஞர் தற்போது அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து உள்ளார்.

Story first published: Monday, September 21, 2020, 21:21 [IST]
Other articles published on Sep 21, 2020
English summary
IPL: Spinner Ravi Bishnoi played well during the match yesterday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X