For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

40 ஆயிரம் பேரின் உயிர்.. பெரிய ரிஸ்க்.. கங்குலி கையில் முடிவு இல்லை.. ஐபிஎல் போட்டி தள்ளிப்போகிறதா?

கொரோனா வைரஸ் தாக்குதலால் ஐபிஎல் 2020 போட்டி நடப்பது சந்தேகம் ஆகியுள்ளது.

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலால் ஐபிஎல் 2020 போட்டி நடப்பது சந்தேகம் ஆகியுள்ளது.

Recommended Video

அச்சுறுத்தும் கொரோன வைரஸ்... ஐபிஎல் நிலை என்ன?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக ஏற்பட்டு வருகிறது. டெல்லியில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இவர் கடந்த சில வாரங்கள் முன் தாய்லாந்து மற்றும் மலேசியா சென்று திரும்பி உள்ளார். ஹரியானாவில், உத்தரகாண்டிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

கூட்டம் கூட கூடாது

கூட்டம் கூட கூடாது

இந்த நிலையில் இந்தியாவில் மக்கள் பொது இடங்களில் கூட கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டங்களை ரத்து செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அரசு சார்பாக நடத்தப்படும் விழாக்களும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஹோலி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் மோடியின் ஐரோப்பிய பயணம் மொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் சந்தேகம்

ஐபிஎல் சந்தேகம்

இந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டி நடக்குமா என்பது சந்தேகம் ஆகியுள்ளது. ஐபிஎல் 2020 தொடர் இந்த மாதம் இறுதியில் 28ம் தேதி தொடங்க உள்ளது. பொதுவாக ஒரு போட்டியை காண 30-40 ஆயிரம் பேர் வருவார்கள். கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில் இப்படி பலர் ஒரே இடத்தில் இருப்பது பெரிய ரிஸ்க். மக்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் ஐபிஎல் திட்டமிட்டபடி நடக்குமா என்பது சந்தேகம்தான்.

கங்குலி என்ன சொன்னார்

கங்குலி என்ன சொன்னார்

ஆனால் பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐபிஎல் போட்டி கண்டிப்பாக நடக்க வாய்ப்புள்ளது. தேதிகளில் எந்த மாற்றமும் கிடையாது. கண்டிப்பாக திட்டமிட்டபடி 28ம் தேதி போட்டிகள் துவங்கும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் கங்குலி முடிவு எடுத்தால் மட்டும் இப்படி போட்டியை நடத்த முடியாது என்கிறார்கள். இதற்கு மத்திய அரசும் அனுமதி அளிக்க வேண்டும்.

மீட்டிங் நடக்கும்

மீட்டிங் நடக்கும்

தற்போது கொரோனா காரணமாக முக்கியமான முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்கும். கிரிக்கெட் போட்டிக்காக மக்களின் உயிரோடு விளையாட முடியாது. அதேபோல் கிரிக்கெட் வீரர்களுக்கும் இது பாதுகாப்பு கிடையாது. ஆகவே இது தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களில் மீட்டிங் நடக்கும் என்கிறார்கள். மத்திய அரசு மற்றும் பிசிசிஐ தலைவர்கள் இடையே இந்த கூட்டம் நடக்கும்.

முடிவு செய்வார்கள்

முடிவு செய்வார்கள்

இந்த கூட்டத்தில்தான் ஐபிஎல் 2020 குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். மக்களின் பாதுகாப்பு கருதியும், வெளிநாட்டு வீரர்களின் நிலை கருதியும், ரசிகர்களின் எதிர்பார்ப்பு, வருமானம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்படும். ஐபிஎல் போட்டிக்காக இப்போது சென்னை அணி தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில் போட்டி நடப்பதே சந்தேகமாக இருக்கிறது.

Story first published: Saturday, March 7, 2020, 12:51 [IST]
Other articles published on Mar 7, 2020
English summary
IPL season 12 may be halted because of CoronaVirus epidemic.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X