For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வீரர்கள் தக்க வைத்ததில் யாரு பாஸ்..?? ஐ.பி.எல். அணிகளின் ரிபோர்ட் கார்டு..!!

ஐ.பி.எல். 2022ஆம் ஆண்டு ஏலம் அடுத்த ஆண்டு தொடங்க உள்ள நிலையில், வீரர்கள் தக்க வைக்கும் பட்டியலை அணிகள் வெளியிட்டன.

இதில் சில அணிகள் 4 வீரர்களையும், சில அணிகள் 3 வீரர்களையும் தேர்வு செய்தது. சில அணிகள் நட்சத்திர வீரர்களை தக்க வைக்காமல் விட்டது.

இதில் எந்த அணி தேர்வில் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பதை பார்த்து அதற்கு மதிப்பெண் வழங்கலாம்

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜா, தோனி, மொயின் அலி, ருத்துராஜ் ஆகிய 4 வீரர்களை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் சென்னை அணி 10க்கு 9 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. தோனியை 2வது வீரராக தேர்வு செய்து, ஜடேஜாவை அதிக ஊதியத்தில் தக்கவைத்தது மாஸ்டர் ஸ்ட்ரோக்காக பார்க்கப்படுகிறது. முடிந்தவரை சிறந்த 4 வீரர்களை அந்த அணி தேர்வு செய்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா, பும்ரா, சூரியகுமார், பொலார்ட் ஆகிய 4 வீரர்களை தேர்வு செய்துள்ளது.இதன் மூலம் அந்த அணி 8 மதிப்பெண்களை பெற்றுள்ளது. ஆல் ரவுண்டர் ஹ்ர்திக் பாண்டியா, இஷான் கிஷனை விடுவித்தது குறையாக பார்க்கப்பட்டாலும் வேறு தவறு செய்யவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 4 சிறந்த வீரர்களை தேர்வு செய்துள்ளது. ரஸில், சுனில் நரைன் என அனுபவ வீரர்களையும், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி என 4 வீரர்கள் என தேர்வு செய்துள்ளது.இருப்பினும் ராகுல் திரிபாதி, சுப்மான் கில் அல்லது ஷகிபுல் ஹசனை தக்கவைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.இதனால் அந்த அணிக்கு 7 மதிப்பெண்கள் ஆகும்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகிய 3 வீரர்களை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 10க்கு 6 மதப்பெண்களை பெற்றுள்ளது. பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் உள்ளிட்ட வீரர்களை யாரேனும் ஒருவரை தேர்வு செயது இருந்தால் கலக்கலாக இருந்திருக்கும்

பெங்களூரு அணி

பெங்களூரு அணி

பெங்களூரு அணி விராட் கோலி, மேக்ஸ்வெல், முகமது சிராஜை தக்க வைத்துள்ளது. ஆனால் கடந்த முறை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்சல் பட்டேலை விடுவித்தது, சாஹலை விடுவித்தது பெங்களூரு அணி செய்த தவறாக பார்க்கப்படுகிறது. இதனால் அந்த அணிக்கு 5 மதிப்பெண்களே கிடைத்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி அணி ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல், பிரித்வி ஷா மற்றும் நோக்கியா ஆகியோரை தக்க வைத்துள்ளது. ஆனால் அனுபவ வீரர்கள் அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர், ரபாடா உள்ளிட்ட வீரர்களை ஆலோசனை செய்யாமலேயே விடுவித்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் அந்த அணிக்கு 4 மதிப்பெண்களே கிடைத்துள்ளது.

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி மாயங் அகர்வால் , அர்சதீப் சிங் என 2 வீரர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளது. கே. எல்.ராகுல், முகமது ஷமி, பூரான் உள்ளிட்ட வீரர்களை விடுவித்தது தவறாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கே.எல்.ராகுலை தக்க வைக்க போதிய முயற்சி எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த அணிக்கு 2 மதிப்பெண்களே கிடைத்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐதராபாத் அணி வில்லியம்சன், சமத், உம்ரான் மாலிக் ஆகிய 3 பேரை தேர்வு செய்துள்ளது. 2 இளம் வீரர்களை தேர்வு செய்தாலும், வார்னர், ரஷித் கான், புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்களை ஐதராபாத் அணி விடுவித்தது தவறாக பார்க்கப்படுகிறது. இதனால் அந்த அணிக்கு 2 மதிப்பெண்களே கிடைத்துள்ளது.

Story first published: Wednesday, December 1, 2021, 22:02 [IST]
Other articles published on Dec 1, 2021
English summary
IPL Team Rankcard in the Retention 2022. CSK, MI Performed Well and SRH, Punjab Kings Fails to Retain star Player
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X