For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...? சூப்பர்ப்பு.. !!

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முழுமையான லீக் போட்டி அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது. தொடரின் பைனல் போட்டி சென்னையில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐபிஎல்லில் இந்த ஆண்டுக்கான 12வது தொடர் வரும் மார்ச் 23ல் துவங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

அந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் முடிந்துவிட்டது. சென்னை அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர்.

அட்டவணை வெளியீடு

அட்டவணை வெளியீடு

வரும் ஏப்ரல் 5ம் தேதி வரையிலான போட்டி அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, எஞ்சிய அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.

நாக் அவுட் அட்டவணை

பிசிசிஐ, நிர்வாகிகள் கூட்டத்தில், லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியிட்டது. மே 5ம் தேதி வரையிலான முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது. நாக் அவுட் சுற்றுப் போட்டிக்கான அட்டவணையை இன்னும் வெளியிட வில்லை.

மே 12ம் தேதி இறுதிப்போட்டி

மே 12ம் தேதி இறுதிப்போட்டி

இந்நிலையில் சென்னையில் வரும் மே 12ல் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் பைனல் நடக்கவுள்ளதாக தெரிகிறது. இதேபோல நாக் அவுட் போட்டியின் முதல் குவாலிபயர் போட்டி மே 7ம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

வெளியேற்றுதல் சுற்று

வெளியேற்றுதல் சுற்று

எலிமினேட்டர் போட்டி மே 8ம் தேதியும் நடைபெறும் என்று தெரிகிறது.மே 10ம் தேதி 2வது குவாலிபயர் போட்டியும் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விசாகப்பட்டினம் தயார்

விசாகப்பட்டினம் தயார்

தவிர்க்க முடியாத காரணத்தால் போட்டிகள் வேறு இடத்தில் நடத்த முடியாத நிலை உருவானால், விசாகப்பட்டினத்தை தயாராக வைத்திருக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக மொத்தத்தில் ஐபிஎல் ஜூரம் இப்போதே தொடங்கிவிட்டது என்று கூறலாம்.

Story first published: Tuesday, March 19, 2019, 19:15 [IST]
Other articles published on Mar 19, 2019
English summary
The BCCI today announced the complete league table of the IPL Cricket series. The tournament's final match will be held in Chennai, sources said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X