For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியின் எதிர்காலத்தையே மாற்றும்.. டெல்லி vs பஞ்சாப் போட்டி ரொம்ப ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா?

துபாய்: டெல்லி மற்றும் பஞ்சாப் இடையே இன்று நடக்கும் ஐபிஎல் போட்டி இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தையே மாற்ற வாய்ப்புள்ளது. இன்று நடக்கும் போட்டி மட்டுமல்ல, இந்த இரண்டு அணிகள் இனி விளையாடும் போட்டியும் அதிக முக்கியத்துவம் பெறும்.

நேற்று சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டியில் சென்னை வென்றது. இந்த நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையில் ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது.

துபாயில் இந்த போட்டி நடக்க உள்ளது. பல்வேறு காரணங்களுக்காக இந்த போட்டி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த போட்டியே மிகவும் வித்தியாசமாக இருக்க போகிறது.

அஸ்வின் அஸ்வின் போட்டி

அஸ்வின் அஸ்வின் போட்டி

இந்த போட்டி, இந்த தொடர் அஸ்வினின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தொடராக இருக்கும். அமீரக பிட்ச் முழுக்க முழுக்க ஸ்பின் பிட்ச். இதில் அஸ்வினின் பவுலிங்கை பொறுத்து அவருக்கு இந்திய அணியில் கூட வாய்ப்பு கிடைக்கும். கடந்த ஐபிஎல் போட்டிகளில் சரியாக விளையாடாத அஸ்வின் இதில் சோபிக்க வாய்ப்புள்ளது. அதிலும் இவர் தன்னுடைய பழைய டீம் பஞ்சாப்பை எதிர்த்து இன்று விளையாடுகிறார்.

கும்ப்ளே கும்ப்ளே

கும்ப்ளே கும்ப்ளே

அதோடு இன்னொரு பக்கம் பஞ்சாப் அணியன் கோச்சாக கும்ப்ளே தேர்வாகி உள்ளார். ஒரு வருட பயிற்சிக்கு பின் அவர் பயிற்சியின் கீழ் பஞ்சாப் இன்று விளையாடுகிறது. அதிலும் தனது சொந்த ஊர் பையன் கே.எல் ராகுல் கேப்டனாக இருக்கும் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார்.அதனால் இவர்கள் இடையிலான கெமிஸ்ட்ரி அதிகம் கவனிக்கப்படும்.

ராகுல் ராகுல் எப்படி

ராகுல் ராகுல் எப்படி

அதேபோல் கோலி, ரோஹித்துக்கு அடுத்து இந்திய கேப்டன் ஆகும் வாய்ப்பு கேஎல் ராகுலுக்கு உள்ளது. கேஎல் ராகுல் இந்த தொடரில் எப்படி கேப்டன்சி செய்கிறார். அணியை எப்படி வழி நடத்துகிறார் என்பதை பொறுத்தே, அவரின் கேப்டன்சி வாய்ப்புகள் கணிக்கப்படும். அதிக நம்பிக்கை இவர் மீது வைக்கப்படுகிறது. இவர் அதை பூர்த்தி செய்வாரா என்று இன்று தெரிந்துவிடும்.

டெல்லி டெல்லி எப்படி

டெல்லி டெல்லி எப்படி

அதேபோல் இன்னொரு பக்கம் டெல்லியின் அணியின் கேப்டன் ஷ்ரேயேஸ் ஐயர் எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இவரும் கேப்டன்சி ரேஸில் இருக்கிறார். தன்னை நல்லா கேப்டன் என்று கடந்த தொடரிலேயே இவர் நிரூபித்து விட்டார். கடந்த முறை வீழ்ச்சியில் இருந்து டெல்லியை இவர் மீட்டு கொண்டு வந்தார். இந்த தொடரில் இவர் டெல்லி அணியை பைனலுக்கு கொண்டு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இளம் படை

இளம் படை

இன்னொரு பக்கம் இரண்டு அணியிலும் ரிஷப் பண்ட், கருண் நாயர், மன்தீப் சிங், பிரித்வி ஷா, என்று இளம் வீரர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் இந்திய அணிக்கு வருவார்களா என்பதும் இன்றைய போட்டியை, இதற்கு அடுத்து வரும் போட்டியை பொறுத்தே இருக்கு என்கிறார்கள்.

அனுபவம் கிரிக்கெட் அனுபவம்

அனுபவம் கிரிக்கெட் அனுபவம்

இப்படி இரண்டு அணிகளுமே இந்திய கிரிக்கெட் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அணிகள். அப்படைப்பட்டதா இரண்டு அணிகள் மோத உள்ளது இன்னும் இந்த போட்டியின் முக்கியத்துவதை அதிகரிக்க தொடங்கி உள்ளது. ராகுல் vs ஷ்ரேயேஸ் ஐயர் இடையே இன்று நடக்கும் மோதல் சிறந்த கிரிக்கெட் அனுபவமாக இருக்கப்போகிறது.

Story first published: Sunday, September 20, 2020, 19:15 [IST]
Other articles published on Sep 20, 2020
English summary
IPL: Why Delhi and Punjab match is important to look out?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X