For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரை ஏன் எடுக்கவில்லை.. வார்னரின் திடீர் முடிவால் பொங்கிய ரசிகர்கள்.. எஸ்ஆர்எச் அணியில் அரசியல்!

துபாய்: ஹைதராபாத் அணியில் இன்று வார்னர் தேர்வு செய்த வீரர்கள் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் பலர் கேப்டன் வார்னர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. துபாயில் போட்டி சூடுபிடித்துள்ளது. இதில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் வென்ற பவுலிங் தேர்வு செய்தது.

அதன்பின் பேட்டிங் இறங்கிய பெங்களூர் முதலில் அதிரடியாக ஆடியது. ஆனால் அதன்பின் பெரிய அளவில் ரன் ரேட் வேகம் எடுக்காவில்லை.

கெட்ட ஆட்டம் போட்ட தேவ்தத் படிக்கல்.. கோலியின் கண்டுபிடிப்பு..எந்த ஊர்ன்னு கேட்டா ஆடிப்போய்டுவீங்க!கெட்ட ஆட்டம் போட்ட தேவ்தத் படிக்கல்.. கோலியின் கண்டுபிடிப்பு..எந்த ஊர்ன்னு கேட்டா ஆடிப்போய்டுவீங்க!

குழப்பம்

குழப்பம்

இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல் வெளியான போதே அந்த அணியின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆனார். ஹைதராபாத் அணியின் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுவாகவே கிரிக்கெட் ரசிகர்கள் பலர் இன்று அதிர்ச்சி அடைந்தனர். இன்று ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர், ஜானி பிரைஸ்டோ ஆகியோர் ஓப்பனிங் வீரர்களாக இறங்க உள்ளனர்.

அடுத்த இடம்

அடுத்த இடம்

அடுத்தடுத்த இடங்களில் மனிஷ்பாண்டே , பிரியம் கார்க், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, மிட்சல் மார்ஷ், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, தி நடராஜன் ஆகியோர் இறங்குகிறார்கள். ஹைதராபாத் அணியில் ஆச்சர்யமாக அபிஷேக் சர்மா, டி நடராஜன் ஆகியோர் இணைந்து உள்ளனர். ஆனால் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முன்னாள் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் அணியில் இடம்பெறவில்லை.

ஏன் இப்படி

ஏன் இப்படி

ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் சேர்க்கப்படாமல் போனதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகிறது . அணி சமமாக இருக்க வேண்டும், அனைத்து விதமான வீரர்களும் இருக்க வேண்டும் என்ற வகையில் பிளேயிங் லெவனை வடிவமைத்ததாக கேப்டன் வார்னர் கூறியுள்ளார். இன்னொரு பக்கம் கேன் வில்லியம்சன் பார்மில் இல்லை.

சந்தேகம்

சந்தேகம்

அவரை ஓப்பனிங் இறக்குவது சரியாக இருக்காது. ஒன் டவுன் இறக்குவதும் சரி இல்லை. அதேபோல் அவர் பார்மிற்கு இப்போது பிளேயிங் லெவனில் இறங்க வாய்ப்பில்லை என்று கூறினார்கள். ஆனால் கேன் வில்லியம்சன் பார்மில்தான் இருக்கிறார் என்றும் அணி நிர்வாகத்தில் சிலர் கூறியுள்ளனர். இன்னொரு பக்கம் அணியில் டேவிட் வார்னர், ஜானி பிரைஸ்டோ, மிட்சல் மார்ஷ், ரஷீத் கான் இருப்பதால் வெளிநாட்டு வீரர்களை கூடுதலாக எடுக்க முடியாது. இதுதான் அவரை நீக்க காரணம் என்கிறார்கள்.

மோதல் அரசியல்

மோதல் அரசியல்

அதே சமயம் கேன் வில்லியம்சன் வார்னர் இடையே இருக்கும் மோதல்தான் இதற்கு காரணம். இவர்கள் இடையே பெரிய அளவில் செட்டாகவில்லை. எல்லாம் அரசியல். இதனால்தான் ஜானி பிரைஸ்டோ பார்மில் இல்லை என்றாலும் அவரை அணியில் எடுத்துவிட்டு, கேன் வில்லியம்சனை எடுக்கவில்லை என்று ரசிகர்கள் புலம்ப தொடங்கி உள்ளனர். அவரை அணியில் எடுக்காதது மிகப்பெரிய தவறு என்று விமர்சனம் வைக்க தொடங்கி உள்ளனர்.

Story first published: Monday, September 21, 2020, 21:22 [IST]
Other articles published on Sep 21, 2020
English summary
IPL: Why Kane willaimson not included in SRH playing eleven against Bangalore?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X