சச்சின் மகனை எடுத்ததால் இது தான் லாபம்...மும்பை அணியின் கணக்கு பலிக்குமா?

சென்னை: அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்ததன் பின்னணியில் 3 சிறப்பான விஷயங்கள் மறைந்துள்ளன.

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது.

டிவிஸ்ட்.. ஆர்சிபியிலுருந்து 9 முக்கிய வீரர்கள் நீக்கம்.. சாட்டையை சுழற்றிய கோலி.. முழு லிஸ்ட்!

எந்த அணியும் அர்ஜுன் டெண்டுல்கர் மீது ஆர்வம் காட்டாத நிலையில் மும்பை அணி மட்டும் ஆர்வம் காட்டியதற்கு பின்னால் 3 நல்ல விஷயங்கள் மறைந்துள்ளன.

 முதலீடு

முதலீடு

21 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர் அனுபவம் இல்லாத வீரராக இருந்தாலும் எதிர்காலத்தில் சிறந்த வீரர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதற்கு உதாரணம் உள்ளூர் போட்டிகளில் அவரின் சிறப்பான ஆட்டங்களாகும். அதே போல் மும்பை அணியில் உள்ள அனுபவமிக்க வீரர்களால் அவர் நிச்சயம் மெருகேற்றப்படுவார். இதனால் மும்பை அணிக்கு இது எதிர்காலத்திற்கான முதலீடாக பார்க்கப்படுகிறது.

பலம்

பலம்

சச்சின் டெண்டுல்கர் வலதுகை பேட்ஸ்மேன். ஆனால் அர்ஜுனோ இடது கை வேகப்பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன். வலதுகை பவுலர்களை விட இடது கை பவுலர்கள் பேட்ஸ்மேனுக்கு அதிக நெருக்கடி தரக்கூடியவர்கள். அவர்கள் பந்துவீசும் போது அதிகளவில் கையை உயர்த்துவார்கள் என்பதால் பேட்ஸ்மேன்கள் குழம்புவார்கள். இது மும்பை அணிக்கு வலு சேர்க்கும்.

ஃபேன் பாய்

ஃபேன் பாய்

அர்ஜுன் டெண்டுல்கர் சிறு வயதுமுதலே மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகர் ஆவார். அவர் மும்பையை சேர்ந்தவர். இதனால் மும்பை அணி அர்ஜுனுக்கு பழக்கப்பட்ட அணியாக இருக்கும். மேலும் அவரின் ஆட்டத்தை மேம்படுத்தவும் மும்பை இந்தியன்ஸ் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

பவுலர்கள்

பவுலர்கள்

அர்ஜுன் டெண்டுல்கருடன் சேர்த்து நாதன் கோல்டர்நைல், ஆடம் மைல்ன் ஆகியோரை மும்பை அணி பந்துவீச்சுக்காக ஏலம் எடுத்துள்ளது. மும்பை அணி ஏற்கனவே அசுர பலத்தில் உள்ள நிலையில் கூடுதல் வீரர்களை சேர்த்து இந்தாண்டும் கோப்பை வெல்ல தயாராகி வருகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL2021 Auction: 3 good things behind that MI Picking Arjun tendulkar
Story first published: Sunday, February 21, 2021, 11:44 [IST]
Other articles published on Feb 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X