For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

8 ரன்னில் பெரிய சாதனை போச்சே.. சச்சின் - டிராவிட் சாதனையை காலி செய்த வெ.இண்டீஸ் ஜோடி!

Recommended Video

WI VS IRELAND: Shai Hope - John Campell: வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ் ஜோடி- வீடியோ

டுப்ளின் : வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஷாய் ஹோப் மற்றும் ஜான் கேம்பல் இணைந்து ஒருநாள் போட்டிகளில் முதல் விக்கெட்டுக்கான சிறந்த பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்தனர்.

அயர்லாந்து நாட்டில், அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து மோதின.

மண் அள்ளிப் போட்டு மூடிய உத்தப்பா.. புஸ் ஆன ரஸ்ஸல் வெடி.. பரிதாப தினேஷ் கார்த்திக்! #MIvsKKR மண் அள்ளிப் போட்டு மூடிய உத்தப்பா.. புஸ் ஆன ரஸ்ஸல் வெடி.. பரிதாப தினேஷ் கார்த்திக்! #MIvsKKR

சாதனை துவக்கம்

சாதனை துவக்கம்

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்கள் ஷாய் ஹோப் மற்றும் ஜான் கேம்பல் அபார துவக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 365 ரன்கள் சேர்த்து சாதனை செய்தது இந்த ஜோடி.

சாதனை கூட்டணி

சாதனை கூட்டணி

ஷாய் ஹோப் 170, கேம்பல் 179 ரன்கள் குவித்து 48வது ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களது கூட்டணி, பல பார்ட்னர்ஷிப் சாதனைகளை தூக்கி அடித்து துவம்சம் செய்தது. ஒரே ஒரு சாதனையை மட்டுமே இவர்கள் முறியடிக்கவில்லை.

முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்

முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்

இதற்கு முன் பாகிஸ்தான் வீரர்கள் இமாம் உல் ஹக் - பாக்கர் ஜமான் முதல் விக்கெட்டுக்கு 304 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்து வந்தது. அந்த முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்து 365 ரன்கள் சேர்த்தது ஹோப் - கேம்பல் ஜோடி.

சச்சின் - டிராவிட் சாதனை

சச்சின் - டிராவிட் சாதனை

மேலும், எந்த விக்கெட்டுக்குமான சிறந்த பார்ட்னர்ஷிப் வரிசையில் சச்சின் - டிராவிட் ஜோடியை பின் தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது ஹோப் - கேம்பல் ஜோடி. சச்சின் டெண்டுல்கர் - ராகுல் டிராவிட் 1999இல் நியூசிலாந்து அணிக்கு எதிராக 331 ரன்கள் குவித்து இருந்தனர். தற்போது, இவர்களது சாதனையை மூன்றாம் இடத்திற்கு தள்ளி உள்ளனர்.

8 ரன்களில் போச்சே!

8 ரன்களில் போச்சே!

அதிகபட்ச பார்ட்னர்ஷிப் சாதனையை வெறும் 8 ரன்களில் ஹோப் - கேம்பல் ஜோடி தவறவிட்டுள்ளது. இதே வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் - மார்லான் சாமுவேல்ஸ் ஜோடி 372 ரன்கள் குவித்ததே, இதுவரை ஒருநாள் போட்டிகளில் சிறந்த பார்ட்னர்ஷிப்பாக உள்ளது. 365 ரன்கள் குவித்த ஹோப் - கேம்பல், 8 ரன்களில் அந்த பெரிய சாதனையை தவறவிட்டனர்,

அயர்லாந்து படுதோல்வி

அயர்லாந்து படுதோல்வி

இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 381 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய அயர்லாந்து அணி 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து, 196 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

Story first published: Monday, May 6, 2019, 11:12 [IST]
Other articles published on May 6, 2019
English summary
WI vs IRE : Shai Hope - John Campell broke highest opening partnership record in ODI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X