4 பந்துகளில் 4 விக்கெட்.. டி-20 உலகக்கோப்பையில் முதல் சாதனை.. அசத்திய அயர்லாந்து பவுலர்..செம பவுலிங்

துபாய்: சர்வதேச டி20 உலககோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று ஆட்டங்களும், பயிற்சி போட்டிகளிலும் நடைபெற்று வருகின்றன. இன்று அயர்லாந்துக்கும், நெதர்லாந்துக்கும் இடையே போட்டி நடந்து வருகிறது.

டி20 வேர்ல்ட் கப் ஸ்காட்லாந்துடன் அதிர்ச்சி தோல்வி.. சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறுமா வங்காளதேசம்?டி20 வேர்ல்ட் கப் ஸ்காட்லாந்துடன் அதிர்ச்சி தோல்வி.. சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறுமா வங்காளதேசம்?

டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் தொடக்கம் முதலே விக்கெட்டுகள் சீட்டு கட்டுகள்போல் சரிந்தன. கடைசி வரை அந்த அணியால் மீளவே முடியவில்லை.

அயர்லாந்து பவுலர்

அயர்லாந்து பவுலர்

20 ஓவர்களில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 106 ரன்களே எடுத்தது. அயர்லாந்து அணியின் பவுலர் கர்டிஸ் கேம்பர் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதுவும் ஒரே ஓவரில் தொடர்ந்து 4 விக்கெட்டுகளை சாய்த்து உலக சாதனை படைத்தார் கர்டிஸ் கேம்பர். அந்த ஒரு ஓவரே ஆட்டத்தை முழுவதுமாக அயர்லாந்து பக்கம் கொண்டு வந்தது.

4 பந்துகளில் 4 விக்கெட்

4 பந்துகளில் 4 விக்கெட்

அதாவது நெதர்லாந்து 9 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. 10-வது ஓவரை வீச வந்தார் அயர்லாந்து பவுலர் கர்டிஸ் கேம்பர். இந்த ஓவரின் 2-வது பந்து, 3-வது பந்து, 4-வது மற்றும் 5-வது பந்துகள் என தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட் எடுத்து ஹாட்ரிக், தொடர்ச்சியாக 4 விக்கெட் என்ற சாதனைகளை படைத்தார் கர்டிஸ் கேம்பர்.

லசித் மலிங்கா, ரஷீத்கான்

லசித் மலிங்கா, ரஷீத்கான்

டி20 போட்டியில் இதுவரை 20 முறை ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில் ஒரே ஓவரில் தொடர்ந்து 4 விக்கெட்டுகளை சாய்த்தவர்கள் பட்டியலில் 2 பேர் மட்டுமே இதுவரை இருந்தனர். ஆப்கானிஸ்தான் பவுலர் ரஷீத்கான் 2019-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக தொடச்சியாக 4 விக்கெட்கள் எடுத்திருந்தார். இலங்கை முன்னாள் பவுலர் லசித் மலிங்கா 2019-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். தற்போது இந்த பட்டியலில் அயர்லாந்து பவுலர் கர்டிஸ் கேம்பரும் இணைந்துள்ளார். டி-20 உலகக்கோப்பையில் இந்த சாதனையை நிகழ்த்தி இருப்பது இதுவே முதன்முறையாகும்.

நெதர்லாந்து தோல்வி

நெதர்லாந்து தோல்வி

நெதர்லாந்து அணி நிர்ணயித்த மிக எளிதான இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து 15 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட் எடுத்து சாதனை படைத்த கர்டிஸ் கேம்பர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ireland's Curtis Camper took 4 wickets in 4 balls in a row. This is the first time he has performed this feat at the T20 World Cup. Determined by the Netherlands team Ireland reached the target after losing 3 wickets in 15 overs
Story first published: Monday, October 18, 2021, 19:21 [IST]
Other articles published on Oct 18, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X