For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூப்பர்… 142 ஆண்டுகள் டெஸ்ட் வரலாற்றில் யாரும் நிகழ்த்தாத சாதனை.. வாழ்த்துகள் டிம் முர்டா

டேராடூன்: அயர்லாந்து கிரிக்கெட் அணியின் டிம் முர்டா, 142 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்தப்படாத சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகள், டெஸ்ட் கிரிக்கெட் விளையாட சென்ற ஆண்டுதான் தகுதி பெற்றன. ஆனால், இரு நாடுகளும் இதுவரை ஒரேயொரு டெஸ்ட் போட்டியைத் தான் விளையாடியுள்ளன.

இந்நிலையில் இந்தியாவின் உத்தர்காண்டில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் 3 டி-20, 5 ஒருநாள், ஒரே ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றன.

பாகிஸ்தான் டி20 தொடரை தெறிக்க விட்ட ஷேன் வாட்சன்.. அடுத்து ஐபிஎல் தான்.. சிஎஸ்கே ரசிகர்கள் குஷி!! பாகிஸ்தான் டி20 தொடரை தெறிக்க விட்ட ஷேன் வாட்சன்.. அடுத்து ஐபிஎல் தான்.. சிஎஸ்கே ரசிகர்கள் குஷி!!

இரு அணிகளும் சமநிலை

இரு அணிகளும் சமநிலை

டி 20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி, 3-0 என்று வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 2-2 வென்றது. 1 போட்டிக்கு முடிவு இல்லாமல் போனது.

டெஸ்ட் போட்டி

டெஸ்ட் போட்டி

இந்நிலையில் இரு அணிகள் மோதிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டி டேராடுனில் கடந்த 15ம் தேதி துவங்கியது. ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன்னுக்கு சுருண்டது.

314 ரன்கள் குவிப்பு

314 ரன்கள் குவிப்பு

அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான், முதல் இன்னிங்சில் 314 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஷஷாத் 40, ரகமத் ஷா 98, ஹஸ்மதுல்லா 61, கேப்டன் அஸ்கர் ஆப்கன் 67 ரன் விளாசினர்.

ஆல் அவுட்

ஆல் அவுட்

இதைத் தொடர்ந்து, 142 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய அயர்லாந்து அணி 288 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பால்பிர்னி அதிகபட்சமாக 82 ரன் விளாசினார்.

 ஓ பிரையன் 56

ஓ பிரையன் 56

கெவின் ஓ பிரையன் 56, ஜேம்ஸ் மெக்கல்லம் 39, டாக்ரெல் 25, முர்டாக் 27 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கேமரான் டோ 32 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கன் பந்துவீச்சில் ரஷித் கான் 5, யாமின் 3, சலாம்கெய்ல் 2 விக்கெட் வீழ்த்தினர்.

வெற்றி

வெற்றி

அடுத்து 147 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தனது முதல் வெற்றியை ஆப்கன் அணி பதிவு செய்துள்ளது.

ரகமத் ஷா 76 ரன்கள்

ரகமத் ஷா 76 ரன்கள்

ஆப்கன் அணியில் 2-வது இன்னிங்சில் அதிகபட்சமாக ரகமத் ஷா 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் இஷ்நுல்லா 65 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தார். முதல் இன்னிங்சில் 98, 2-வது இன்னிங்சில் 76 ரன்கள் எடுத்த ரகமத் ஷா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

யாரும் பண்ணாத சாதனை

யாரும் பண்ணாத சாதனை

இந்த போட்டியில் ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் 11வது ஆளாக களமிறங்கிய அயர்லாந்தின் டிம் முர்டா, இரண்டு முறையும் 25 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11வது பேட்ஸ்மேன் இப்படிப்பட்ட சாதனையைச் செய்ததில்லை.

Story first published: Monday, March 18, 2019, 15:45 [IST]
Other articles published on Mar 18, 2019
English summary
Ireland's Tim Murtagh creates unique record in 1st Test against Afghanistan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X