For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4 நாட்கள் டெஸ்ட் வடிவம் - கோலி, சச்சின் கருத்துக்கு இர்பான் பதான் மறுப்பு

ஐசிசியின் 4 நாள் டெஸ்ட் போட்டிகள் குறித்த திட்டத்திற்கு முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது முன்னோக்கிய பயணம் என்றும் கூறியுள்ளார்.

Recommended Video

Irfan Pathan Speech | Former All-rounder Irfan Pathan backs the concept of four-day Tests

ஐசிசியின் 4 நாள் டெஸ்ட் போட்டிகள் குறித்த திட்டத்திற்கு முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது முன்னோக்கிய பயணம் என்றும் கூறியுள்ளார்.

பாரம்பரியமான டெஸ்ட் கிரிக்கெட்டின் வடிவத்தை மாற்றுவதற்கு கேப்டன் விராட் கோலி, முன்னாள் பேட்ஸ்மேன்கள் சச்சின் டெண்டுல்கர், கவுதம் கம்பீர் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த 4 நாள் டெஸ்ட் வடிவம் ரஞ்சி கோப்பையில் பயன்படுத்தப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளதை குறிப்பிட்டுள்ள இர்பான் பதான், இந்த 4 நாள் டெஸ்ட் போட்டிகளை முன்னேற்றத்தின் வடிவமாக பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கேரக்டரே சரியில்லை.. இனி டீம்ல எடுக்க வாய்ப்பே இல்லை.. இளம் வீரரின் அதிர வைக்கும் மறுபக்கம்!கேரக்டரே சரியில்லை.. இனி டீம்ல எடுக்க வாய்ப்பே இல்லை.. இளம் வீரரின் அதிர வைக்கும் மறுபக்கம்!

ஓய்வு அறிவித்த இர்பான் பதான்

ஓய்வு அறிவித்த இர்பான் பதான்

இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் கடந்த சனிக்கிழமையன்று அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.

இர்பான் பதான் வரவேற்பு

இர்பான் பதான் வரவேற்பு

இந்நிலையில் ஐசிசி அறிவித்துள்ள 4 நாட்கள் டெஸ்ட் வடிவம் முன்னேற்றத்தின் வடிவம் என்று இர்பான் பதான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கோலி, சச்சின், கம்பீர் எதிர்ப்பு

கோலி, சச்சின், கம்பீர் எதிர்ப்பு

5 நாட்கள் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்கும் புதிய திட்டத்தை ஐசிசி அறிவித்துள்ளது. இதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய கேப்டன் விராட்கோலி, முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கவுதம் கம்பீர் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் கருத்து

சச்சின் டெண்டுல்கர் கருத்து

கிரிக்கெட்டின் தூய்மையான வடிவமாக டெஸ்ட் போட்டிகள் உள்ளதாக தெரிவித்த முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், அதன் பாரம்பரியத்தை சிதைக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

"டெஸ்ட் போட்டிகள் வழக்கொழியும்"

டெஸ்ட் போட்டிகளில் மாற்றம் செய்யக்கூடாது என்று தெரிவித்த விராட் கோலி, 4 நாட்கள், 3 நாட்கள் என்று குறைப்பதற்கு அனுமதிக்கப்பட்டால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் இல்லாமல் செய்வதற்கான வேலையும் நடக்கும் என்றும் விராட் கோலி ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

இர்பான் பதான் வரவேற்பு

இர்பான் பதான் வரவேற்பு

இந்நிலையில் ஐசிசியின் இந்த 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் குறித்த அறிவிப்புக்கு இர்பான் பதான் வரவேற்பு தெரிவித்துள்ளார். தான் இந்த ஆலோசனையை சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே கூறி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வரவேற்பு பெறும் என நம்பிக்கை

வரவேற்பு பெறும் என நம்பிக்கை

ரஞ்சி கோப்பையில் இந்த வடிவம் பயன்படுத்தப்பட்டு வரவேற்பு பெற்றுள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகளிலும் வரவேற்பு பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, January 7, 2020, 17:22 [IST]
Other articles published on Jan 7, 2020
English summary
Former All-rounder Irfan Pathan backs the concept of four-day Tests
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X