For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'தனித்துவமான பவுலர்'.. இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் வெற்றி உறுதி - யாரைச் சொல்கிறார் இர்பான் பதான்?

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி குறித்தும், அதில் பந்துவீச்சில் இந்தியா எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்தும் இர்பான் பதான் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, வரும் ஐந்தாம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இப்போதே இந்த போட்டிக்கான ஹேஷ்டேக் இந்தியளவில் டிரெண்டிங்கில் இடம் பிடித்துவிட்டது. ஆஸ்திரேலிய மண்ணில், ஆஸி., அணியை இந்தியா 'நையப் புடை' ரகத்தில் வீழ்த்தியதே இந்த எதிர்பார்ப்பிற்கு காரணம்.

இந்நிலையில், முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான், இப்போட்டி குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்துள்ளார்.

 யுனிக் பவுலர்

யுனிக் பவுலர்

உங்களுக்கு தினமும் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர்கள் கிடைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். குல்தீப் யாதவ் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக வெளியே பென்ச்சில் தான் உட்கார்ந்து இருக்கிறார். குல்தீப்பிடம் அபார திறமை இருக்கிறது. தனித்துவம் வாய்ந்த வீரர் அவர்.

 நேரம் வந்துடுச்சு

நேரம் வந்துடுச்சு

இப்போது 25 - 26 வயது காலக்கட்டத்தில் இருக்கும் குல்தீப், முதிர்ச்சி அடைய சரியான நேரம் இதுதான். முதல் இரு டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நான் உறுதியாக கூறுவேன்.

 சேப்பாக் ஸ்பின் டிராக்

சேப்பாக் ஸ்பின் டிராக்

சென்னை சேப்பாக் பிட்சில் நிச்சயம் மூன்று ஸ்பின்னர்களுடன் தான் களமிறங்குவார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், சேப்பாக் பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கும். குறிப்பாக, ஸ்பின்னில் நீங்கள் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் கூட அங்கு போட முடியும்

 ஃபாஸ்ட் பவுலிங்கிலும் டாப்

ஃபாஸ்ட் பவுலிங்கிலும் டாப்

ஒருவேளை மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினால் கூட, இந்தியா வலிமையான அணியாகவே இருக்கும். ஏனெனில், நமது Pacers எந்த வகையான பிட்சிலும் சிறப்பாக செயல்பட தயாராக உள்ளனர். ஆனால், Dry பிட்ச்களில் மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்குவதே சிறந்தது.

 இந்தியாவுக்கே கப்

இந்தியாவுக்கே கப்

நிச்சயமாக இந்த டெஸ்ட் தொடரை இந்தியா தான் வெல்லப் போகிறது. அதில் சந்தேகமே வேண்டாம். இங்கிலாந்தும் இலங்கையில் சிறப்பாக விளையாடி தொடரை வென்றிருக்கிறது. ஜோ ரூட் அந்த அணியின் பலம். எனினும், 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்லும் என்பதே என் கணிப்பு" என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, February 3, 2021, 9:11 [IST]
Other articles published on Feb 3, 2021
English summary
Irfan Pathan Backs Kuldeep Yadav ind vs eng - will it works?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X