தோனிக்கு சாபம் கொடுத்த ரசிகர்.. இர்பான் பதான் கொடுத்த கூல் அட்வைஸ்.. ரசிகர்கள் மனதை வென்றார்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கி வந்த இர்பான் பதான் ரசிகர் ஒருவருக்கு சிறப்பான அட்வைஸ் ஒன்றை வழங்கி இருக்கிறார்.

Recommended Video

Dhoni-ஐ சீண்டுகிறாரா Gambhir? Instagram-ல் Oreo Dog Video வெளியீடு | *Cricket

கபில் தேவ்க்கு பிறகு இந்தியா கண்ட சிறந்த ஆல்ரவுண்டர் என்றால் அது இர்பான் பதான் தான். டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டி என அனைத்திலும் இர்பான் பதான் பட்டையை கிளப்பினார்.

இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் என்று கிரேக் சேப்பலால் பாராட்டப்பட்ட இர்பான் பதான் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு பெரிய அளவில் இந்திய அணியில் விளையாடவில்லை.

மகளிர் ஆசிய கோப்பை.. இந்திய அணிக்கு பிசிசிஐ திடீர் சுற்றரிக்கை.. காரணம் ரோகித் சர்மா படை தான்! மகளிர் ஆசிய கோப்பை.. இந்திய அணிக்கு பிசிசிஐ திடீர் சுற்றரிக்கை.. காரணம் ரோகித் சர்மா படை தான்!

ஆல்ரவுண்டர் இர்பான் பதான்

ஆல்ரவுண்டர் இர்பான் பதான்

29 டெஸ்ட் ,120 ஒருநாள் மற்றும் 24 சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடியுள்ள இர்பான் பதான், பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். குறிப்பாக டி20 உலக கோப்பை இந்தியா வென்ற போது ஆட்டநாயகன் விருதை வென்றவர் இர்பான் தான். டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுகள் மற்றும் 1105 ரன்கள், ஒருநாள் போட்டியில் 173 விக்கெட்டுகள் மற்றும் 1544 ரன்கள் , சர்வதேச டி20 போட்டியில் 28 விக்கெட்டுகள் மற்றும் 172 ரன்கள் என உண்மையான ஆல் ரவுண்டராக இர்பான் பதான் திகழ்ந்தார்.

ரசிகர் கோபம்

ரசிகர் கோபம்

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் இர்பான் பதான் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் நான் இர்பான் பதானை பார்க்கும்போதெல்லாம் தோனியையும் அவருடைய நிர்வாகத்தையும் தான் நான் சபிப்பேன். இர்ஃபான் பதான் கடைசியாக இந்தியாவுக்காக ஒரு நாள் போட்டியில் விளையாடியது அவருடைய 29 வது வயதில் என்று நினைத்தால் என்னால் நம்ப முடியவில்லை.

வாய்ப்பு வழங்கவில்லை

வாய்ப்பு வழங்கவில்லை

இர்பான் பதான் போன்ற ஒரு ஆல் ரவுண்டு கிடைக்க அனைத்து அணியினரும் காத்துக் கொண்டிருந்தனர் .ஆனால் இந்திய அணியோ ஜடேஜா மற்றும் ஸ்டுவர்ட் பின்னி போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். ஆனால் கடைசிவரை இர்பானை சேர்க்கவே இல்லை என்று காட்டமாக விமர்சனம் அளித்திருந்தார். இந்த நிலையில் தான் இர்பான் பதான், அவருக்கு பதில் அளித்துள்ளார்.

இர்பான் அட்வைஸ்

இர்பான் அட்வைஸ்

உங்கள் அன்புக்கு நன்றி ஆனால் யாரையும் குறை சொல்லாதீர்கள் என்று அவருக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். இர்பான் பதானின் இந்த பதில் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இர்பான் பதானுக்கு தோனி ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அந்த காலத்தில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Irfan Pathan cool Reply to the fan who scold dhoni attracts netizens தோனிக்கு சாபம் கொடுத்த ரசிகர்.. இர்பான் பதான் கொடுத்த கூல் அட்வைஸ்.. ரசிகர்கள் மனதை வென்றார்
Story first published: Tuesday, September 27, 2022, 20:42 [IST]
Other articles published on Sep 27, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X