இந்த விஷயம் மட்டும் நடந்துச்சுனா..? புதிய சாதனை செய்த முதல் இந்திய வீரராவார் இர்பான் பதான்

மும்பை:கரிபியன் பிரிமியர் லீக் எனப்படும் சிபிஎல் கிரிக்கெட் தொடரில் விருப்பம் தெரிவித்திருக்கிறார் இர்பான் பதான். ஒருவேளை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், வெளி நாட்டு லீக் தொடரில் விளையாடும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார்.

ஐபிஎல் போல பிக்பேஷ் லீக், கரீபியன் பிரீமியர் லீக், கனடா பிரீமியர் லீக், என பல்வேறு நாடுகளில் 20 ஓவர் லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன. இந்திய வீரர்கள் மற்ற நாட்டு லீக் போட்டிகளில் ஆட கிரிக்கெட் வாரியம் அனுமதிப்பது கிடையாது.

இந்நிலையில், இந்த ஆண்டு நடக்க இருக்கும் கரிபியன் லீக் தொடர் ஏலத்தில் கலந்து கொள்ளும் வீரர்களின் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய ஆல்ரவுண்டர் இர்பான் பதான் பெயர் இடம்பெற்றிருக்கிறது. உலகின் வெவ்வேறு நாடுகளிலிருந்து மொத்தமாக 536 வீரர்கள் பதிவு செய்துள்ள இந்த வீரர்கள் பட்டியலில் இந்தியா சார்பாக இர்பான் பதான் மட்டுமே பதிவு செய்திருக்கிறார்.

யப்பா சாமி.. ஆள விடுங்க..! தோனியை பத்தி தப்பாவே சொல்லமாட்டேன்.. டுவிட்டரை அழித்துவிட்டு ஓடிய வீரர்

இந்திய வீரர் ஒருவர் வெளிநாட்டு 20 ஓவர் லீக் தொடரில் பதிவு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். மற்ற வீரர்களை காட்டிலும் இந்திய வீரர் ஒருவர் கரீபியன் லீக் தொடரில் பங்கேற்க பதிவு செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுடன் சேர்த்து மொத்தமாக 20 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். சில முக்கிய வீரர்களான டுமினி, ஷகிப் அல் ஹாசன், அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ரஷித் கான் ஆகியோருடன் ரசல், ஹெட்மைர் மற்றும் ஷை ஹோப் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இர்பான் பதான், 2012ம் ஆண்டு வரை இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார். இடதுகை ஸ்விங் பவுலரான அவர் 2007 டி 20 உலகக் கோப்பையில் சிறப்பாக பந்துவீசி, கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்தார்.

அத்துடன் சில போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்துள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிடல்ஸ்), கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியவர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Irfan Pathan expressed his interest in the caribbean premier league.
Story first published: Friday, May 17, 2019, 13:03 [IST]
Other articles published on May 17, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X