அதை ஜீரணிக்கவே முடியாது.. உண்மையை மறைத்த பக்னர்.. சிட்னி டெஸ்ட் ரகசியம்.. புட்டுபுட்டு வைத்த பதான்

மும்பை : 2008ஆம் ஆண்டு நடைபெற்ற சிட்னி டெஸ்ட் போட்டியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

இந்திய அணிக்கு எதிராக அம்பயர்கள் பல தீர்ப்புகளை அளித்தனர். இந்திய அணி அந்தப் போட்டியில் 122 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

தற்போது அந்தப் போட்டியில் தவறான தீர்ப்புகளை அளித்த ஸ்டீவ் பக்னர் அது பற்றி பேசி இருந்தார்.

என்னையா டீமை விட்டு தூக்குறீங்க? சரமாரியாக விளாசிய இங்கிலாந்து வீரர்.. மிரள வைத்த வெறியாட்டம்!

இரண்டு தவறுகள்

இரண்டு தவறுகள்

ஸ்டீவ் பக்னர் கூறுகையில் அந்தப் போட்டியில் இரண்டு தவறான தீர்ப்புகளை அளித்தேன் என்றும், அதில் ஒரு தவறான தீர்ப்பால் ஒரு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் சதம் அடித்தார். அதனால், இந்திய அணி தோல்வி அடைந்தது என்றும் கூறி இருந்தார்.

உண்மையை மறைக்கிறார்

உண்மையை மறைக்கிறார்

ஆனால், அந்தப் போட்டியில் பல தீர்ப்புகள் இந்திய அணிக்கு எதிராக சென்றது. அது பற்றி இர்பான் பதான் .பேசி உள்ளார். ஸ்டீவ் பக்னர் உண்மையை மறைப்பதை சுட்டிக் காட்டி அந்தப் போட்டியில் ஏழு தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டதாக விளாசி இருக்கிறார்.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கேட்ச்

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கேட்ச்

2008 சிட்னி டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கேட்ச் பிடிக்கப்பட்டார். ஆனால், அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். பின்னர் சைமண்ட்ஸ் 162 ரன்கள் குவித்தார். அவர் மூன்று முறை தவறான தீர்ப்புகளால் அவுட் ஆகாமல் தப்பினார்.

தவறை ஒப்புக் கொண்டார்

தவறை ஒப்புக் கொண்டார்

12 ஆண்டுகள் ஆன நிலையில் தன் தவறை ஒப்புக் கொண்டார் ஸ்டீவ் பக்னர். ஆனால், அவர் அனைத்து தீர்ப்புகளையும் குறிப்பிடாமல் இரண்டு தீர்ப்புகளை மட்டுமே தவறாக வழங்கினேன் என்றார். இர்பான் பதான் என்ன நடந்தது என முழுவதுமாக கூறி உள்ளார்.

அர்த்தம் இல்லை

அர்த்தம் இல்லை

ஸ்டீவ் பக்னர் தவறை ஒப்புக் கொண்டதை பற்றி பேசிய இர்பான் பதான், "நீங்கள் தவறுகளை எந்த அளவுக்கு ஒப்புக் கொண்டாலும் அதில் அர்த்தம் இல்லை. என்ன நடந்ததோ, அது நடந்து விட்டது. நாங்கள் அந்தப் போட்டியில் தோற்று விட்டோம்" என்றார்.

எந்த மாற்றமும் இல்லை

எந்த மாற்றமும் இல்லை

"அம்பயரின் தவறுகளால் ஒரு டெஸ்ட் போட்டியை தோற்பதா? அம்பயர்கள் இப்போது அது பற்றி என்ன பேசினாலும் அதில் எந்த மாற்றமும் நடக்கப் போவதில்லை. நாங்கள் கிரிக்கெட் வீரர்களாக களத்தில் தவறான முடிவுகள் எடுப்போம், அதனால் எரிச்சல் அடைவோம், பின் மறந்து விடுவோம்" என்றார் பதான்.

மூன்று முறை

மூன்று முறை

"ஆனால், இந்த சிட்னி டெஸ்டில் ஒரு (அம்பயர்) தவறு அல்ல. ஏழு தவறுகள் எங்களை தோல்வி அடையச் செய்தது. ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆடிய போது சில தவறுகள் நடந்தது. அவருக்கு மூன்று முறை அம்பயர் அவுட் தரவில்லை." என்றார் இர்பான் பதான்.

ஒரே ஒரு தீர்ப்பு மட்டும்…

ஒரே ஒரு தீர்ப்பு மட்டும்…

மேலும், "சைமண்ட்ஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். நாங்கள் 122 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். அவருக்கு எதிரான ஒரே ஒரு தீர்ப்பு மட்டும் சரியாக இருந்திருந்தால் நாங்கள் அந்தப் போட்டியை எளிதாக வென்று இருப்போம்" என்றார் பதான்.

கோபம்

கோபம்

"அது வெறும் எரிச்சல் மட்டும் அல்ல. முதன்முறையாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கோபம் அடைவதை நான் பார்த்தேன். ரசிகர்கள் மனதில் அப்போது ஒன்று மட்டுமே இருந்தது. இது எல்லாமே வேண்டும் என்றே செய்கிறார்கள் என்பதே அது. கிரிக்கெட் வீரர்களாக நாங்கள் அப்படி நினைக்க முடியாது." என்றார்.

என்ன விளையாடுகிறீர்களா?

என்ன விளையாடுகிறீர்களா?

"நாங்கள்.. சரி இது இப்படித் தான் நடக்கும் என அடுத்த விஷயத்துக்கு செல்ல வேண்டும். ஆனால், ஏழு தவறுகளா? என்ன விளையாடுகிறீர்களா? அது நம்பவே முடியாதது. எங்களால் ஜீரணிக்கவே முடியாது." என தன் கோபத்தை கொட்டினார் இர்பான் பதான்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Irfan Pathan reveals about umpiring errors in 2008 Sydney test
Story first published: Sunday, July 26, 2020, 14:10 [IST]
Other articles published on Jul 26, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X