For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வயசு முக்கியமில்ல தம்பி.... சொல்லி அடித்த இர்பான்.... மீண்டும் உயிர்பெற்ற தோனி மீதான விமர்சனம்

ராய்பூர்: ஐபிஎல்-ல் தோனியின் வயதை கிண்டல் செய்தமைக்காக இர்பான் பதானை ரசிகர்கள் விமர்சனம் செய்த நிலையில் அவர்களுக்கு சாலை பாதுகாப்பு டி20 போட்டி மூலம் இர்ஃபான் பதிலடி கொடுத்துள்ளார்.

சாலை பாதுகாப்பு டி20 தொடரில், இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் - இந்தியா லெஜெண்ட்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் அரை சதம் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் அவரின் நேற்றையை ஆட்டத்தையும், ஐபிஎல் தொடரின் போது அவர் தோனியை கிண்டல் செய்ததையும் ஒப்பிட்டு ரசிகர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

கடந்த ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி டெஸ்ட் போட்டியில் ஆடுவதை போன்று ஆடியதாக விமர்சிக்கப்பட்டது. மொத்தம் 14 போட்டிகளில் ஆடிய அவர் 200 ரன்களை எடுத்தார். அணிக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் கேப்டன் ஃபார்ம் அவுட்டில் இருப்பதை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

மறைமுக விமர்சனம்

மறைமுக விமர்சனம்

அந்தவகையில் முன்னாள் வீரர் இஃபான் பதான், சிஎஸ்கே கேப்டன் தோனியை, சமூக வலைதளத்தில் மறைமுகமாக விமர்சித்தார். அதில், சிலருக்கு வயது என்பது வெறும் எண்தான்.ஆனால் சிலருக்கு மட்டும் அது அணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது தோனி போன்ற வீரர்கள் இந்த வயதில் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், ஆனால் என்னை எல்லாம் வயதை காரணம் காட்டி ஓய்வு பெற வைத்துவிட்டனர் என்பது போல மறைமுகமாக தாக்கி இருந்தார்.

சாலை பாதுகாப்பு டி20

சாலை பாதுகாப்பு டி20

இந்நிலையில் நேற்று இங்கிலாந்துக்கு லெஜெண்ட்ஸுக்கு எதிராக நடைபெற்ற சாலை பாதுகாப்பு டி20 போட்டியில் இர்ஃபான் பதான் சிறப்பாக ஆடினார். அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சரிந்த நிலையில் இர்ஃபான் 34 பந்துகளில் 61 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளும் அடங்கும். போட்டியில் இந்தியா லெஜெண்ட்ஸ் அணி தோற்றிருந்தாலும், இர்ஃபானின் ஆட்டம் பாராட்டப்பட்டது.

 நிரூபனம்

நிரூபனம்

இதனை பார்த்த நெட்டிசன்கள், தோனியை இர்ஃபான் பதான் கிண்டல் செய்ததில் தவறில்லை என்றும், இர்ஃபான், தனக்கு வயதானாலும் திறமையை நிரூபித்துவிட்டதாகவும் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய காட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்காக தோனி பயிற்சியை ஏற்கனவே தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 10, 2021, 23:46 [IST]
Other articles published on Mar 10, 2021
English summary
Irfan pathan's Critism on Dhoni Came again on light after Pathan Slam's 62 against England legends
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X