For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உனக்குலாம் தகுதியே இல்ல...நீயெல்லாம் என்னப்பத்தி பேசுரியா..ரசிகரை விளாசிய யூசஃப் பதான்..என்ன காரணம்

அகமதாபாத்: சமூக வலைதளத்தில் தன்னை கிண்டல் செய்த ஒரு ரசிகரிடம் கடும் கோபத்தில் சாடியுள்ளார் முன்னாள் வீரர் யூசஃப் பதான்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இதற்கு இங்கிலாந்து பந்துவீச்சு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த 3 விஷயத்த செஞ்சா மட்டும் தான் ஜெயிக்க முடியும்..முடிவெடுப்பாரா கோலி...2வது டி20க்கான கணிப்புகள் இந்த 3 விஷயத்த செஞ்சா மட்டும் தான் ஜெயிக்க முடியும்..முடிவெடுப்பாரா கோலி...2வது டி20க்கான கணிப்புகள்

இந்நிலையில் இதுகுறித்த விவாதத்தின் போது ரசிகர் ஒருவரை முன்னாள் வீரர் யூசஃப் பதான் கடுமையாக திட்டித்தீர்த்துள்ளார்.

பேட்டிங் சொதப்பல்

பேட்டிங் சொதப்பல்

அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் அடுத்தடுத்து வெளியேறினார். குறிப்பாக ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ஷிகர் தவான், கே.எல்.ராகுல் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலியும் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

பந்துவீச்சு

பந்துவீச்சு

இந்திய அணியில் அனைத்து வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் சென்ற நிலையில் நிலைத்து நின்று ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் அரை சதம் கடந்தார். இதனால் இந்தியா 124 ரன்களை எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி எளிய இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆர்ச்சர் 3 விக்கெட்டும், ரஷித், மார்க் வுட், ஜோர்டன், ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

 பதான் ட்வீட்

பதான் ட்வீட்

இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் வீரர்கள் பலர் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அந்தவகையில் யூசஃப் பதான், தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்? அனேகமாக பிட்ச்-ல் வேகம் மாறுபட்டிருக்குமோ என நினைகிறேன் என பதிவிட்டிருந்தார். இதற்கு கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர் ' பாஸ் நீங்கள் வேகமாகவே பந்துவீசியதில்லை என கிண்டல் செய்திருந்தார்

பதிலடி

பதிலடி

இந்த பதிவை கண்டு கடும் கோபமடைந்த யூசஃப் பதான், நீயெல்லாம் இந்திய அணியில் விளையாடியது கூட இல்லை..நீ என்னிடம் வேகப்பந்துவீச்சை பற்றி பேசுகிறாயா? என காட்டமாக தெரிவித்துள்ளார். முன்னாள் வீரரின் இந்த ரிப்ளைக்கு ஒருபுறம் ரசிகர்கள் ஆதரவளித்து வந்தாலும், மற்றொரு புறம் ரசிகரின் ட்வீட்டுக்கு இப்படியா பதிலளிப்பது என அதிருப்தியடைந்துள்ளனர்.

Story first published: Saturday, March 13, 2021, 19:15 [IST]
Other articles published on Mar 13, 2021
English summary
Irfan Pathan slams a fan who critize him on Twitter
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X