For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிறந்த மண் தென்.ஆ.. விளையாடுவது நியூசி.,க்கு.. 3 வருட தவம் - கோலி எதிர்பார்க்காத "விஸ்வரூப" சிக்கல்

லண்டன்: நியூசிலாந்து பேட்ஸ்மேன் டெவோன் கான்வே பற்றிய செய்தி தான் கிரிக்கெட் உலகெங்கும். களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், அதுவும் லார்ட்ஸில் சதம் அடித்து, அசத்தியிருக்கிறார். உண்மையில் இந்திய அணி எதிர்பார்க்காத சவால் இது. அதிர்ச்சியோடு கொஞ்சம் ஆச்சர்யத்தையும் அதில் மிக்ஸ் பண்ணிக்கோங்க.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி, லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஜூன்.2) தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஓலே ராபின்சன் மற்றும் ஜேம்ஸ் பிரேஸே ஆகியோருக்கு முதன் முதலாக டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல், நியூசிலாந்து அணியில் டெவோன் கான்வே முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.

 கம்பீர சதம்

கம்பீர சதம்

நியூசிலாந்து, முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுக்க, 136 ரன்கள் என்னோடது என்று சொல்லி நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக களத்தில் நிற்கிறார். டெவோன் கான்வே. நேர்த்தியான கிரிக்கெட் என்பதை விட, நிதானமான ஆட்டம் தான் நம்மை ஆச்சர்யப்படுத்தியது. ஏதோ, 50 போட்டிகள் விளையாடிய சீனியர் வீரரைப் போல, ஷாட்ஸ் தேர்வில் எந்தவித குழப்பமும், பதட்டமும் இன்று விளையாடினார். அந்த அணுகுமுறை அவர் மீதான நம்பிக்கையை ஏகத்துக்கும் அதிகரித்திருக்கிறது.

 கங்குலி சதம்

கங்குலி சதம்

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில், அயல்நாட்டை சேர்ந்த ஒரு வீரர் அறிமுக போட்டியிலேயே சதமடிப்பது 25 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் நடக்கிறது. கடைசியாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தான் சதமடித்திருந்தார். அதன் பிறகு, கான்வே தான் இப்போது அடித்திருக்கிறார்.

 விடா முயற்சி

விடா முயற்சி

கிரிக்கெட்டில் தன்னுடைய வாய்ப்புக்காக கான்வே நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. அவர் தனது நாடான சொந்த தென்னாப்பிரிக்காவிலிருந்து, தனது இளம் வயதிலேயே நியூசிலாந்துக்கு குடி பெயர்ந்தார். ஆனால், அங்கு நியூசிலாந்து அணியில் விளையாட வேண்டுமெனில், மூன்று வருடம் காத்திருக்க நேரிட்டது. கடந்த ஆண்டு டி20 வாய்ப்பும், மார்ச் மாதம் ஒருநாள் போட்டி வாய்ப்பும் கிடைத்த நிலையில், இப்போது தான் அவருக்கு டெஸ்ட் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. டி20யில் அவர் சராசரி - 59.12, ஒருநாள் போட்டியில் - 75.00.

 கடும் அச்சுறுத்தல்

கடும் அச்சுறுத்தல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18ம் தேதி தொடங்கவிருக்கிறது. இதில், இந்தியாவும் - நியூசிலாந்து மோதுகின்றன. இதில், இந்திய அணி பல வியூகங்களை வகுத்திருக்கிறது. ஆனால், அவர்களது கணக்கில் டெவன் கான்வே புதிதாக இடம் பிடித்திருக்கிறார். புரியும்படி சொல்ல வேண்டுமெனில், இந்திய அணியின் வியூகத்தில் இப்படி ஒரு வீரரே கிடையாது. இங்கிலாந்து பிட்சில், இங்கிலாந்து பவுலர்களையே ஓட விட்டிருக்கும் கான்வே, நிச்சயம் இந்திய பவுலர்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Thursday, June 3, 2021, 14:42 [IST]
Other articles published on Jun 3, 2021
English summary
devon conway threat against india wtc final - டெவோன் கான்வே
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X