For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்-க்கு மீண்டும் வரும் கவுதம் கம்பீர்.. யாரும் எதிர்பார்காத ஷாக் கொடுத்த புதிய அணி..பின்னணி என்ன

மும்பை: ஐபிஎல் அணிகள் அனைத்திற்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது புதிதாக வந்துள்ள லக்னோ அணி.

Recommended Video

Gautam Gambhir to be Lucknow Team Mentor ahead of IPL 2022 | OneIndia Tamil

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் ஜனவரியில் நடைபெறவுள்ளது. இந்த முறை புதிதாக வந்துள்ள 2 அணிகளும், சிறந்த வீரர்களுடன் களமிறங்க திட்டம் தீட்டி வருகிறது.

குறிப்பாக மெகா ஏலத்திற்கு முன்பாகவே ஒட்டுமொத்த அணியின் வடிவமைப்பையும் முடித்துள்ளது லக்னோ அணி நிர்வாகம்.

ஐபிஎல்: வெளிவந்த வார்னரின் 2வது முகம்.. சங்கடத்தில் சிக்கி தவிக்கும் ஐதராபாத் அணி.. போர்க்களம் உறுதிஐபிஎல்: வெளிவந்த வார்னரின் 2வது முகம்.. சங்கடத்தில் சிக்கி தவிக்கும் ஐதராபாத் அணி.. போர்க்களம் உறுதி

மெகா ஏலம்

மெகா ஏலம்

புதிய அணிகள் மெகா ஏலத்திற்கு முன்பாகவே 2 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை தேர்வு செய்துக்கொள்ளலாம் என அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்தியாவின் எதிர்காலமாக பார்க்கப்படும் கே.எல்.ராகுலை கேப்டனாக ஒப்பந்தம் செய்துள்ளது லக்னோ அணி. மேலும் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கானையும் வளைத்துப்போட்டது, மற்ற அணிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தலைமை கோச்

தலைமை கோச்

இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஜிம்பாவே அணியின் ஜாம்பவான் ஆண்டி ப்ளவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். ஐபிஎல்-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் கோச்சாக இருந்து வந்த அவரை பல கோடிகள் செலவு செய்து தங்கள் வசம் ஈர்த்துள்ளது. இதனால் அணியின் பலம் மேலும் கூடியது.

புதிய முடிவு

புதிய முடிவு

இந்நிலையில் இவை அனைத்திற்கும் மேலாக அதிரடி நடவடிக்கை ஒன்றையும் லக்னோ அணி எடுத்துள்ளது. அந்த அணியின் ஆலோசகராக செயல்பட இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு மற்றும் 2011ம் ஆண்டுகளில் இந்திய அணி உலகக்கோப்பைகளை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர் கம்பீர். இதுமட்டுமல்லாமல் கொல்கத்தா அணியையும் வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்தார்.

எதிர்பார்ப்புகள் என்ன

எதிர்பார்ப்புகள் என்ன

இவ்வளவு அனுபவம் கொண்டவரை ஆலோசகராக நியமித்து மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது லக்னோ அணி. ஏற்கனவே கே.எல்.ராகுலின் கேப்டன்சி மற்றும் ஆண்டி ஃப்ளவரின் கோச்சிங் என அட்டகாசமான் ஃபார்மில் இருந்தது. தற்போது கம்பீரும் இணைந்திருப்பதால் ஐபிஎல் கலக்கப்போகிறது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Saturday, December 18, 2021, 23:53 [IST]
Other articles published on Dec 18, 2021
English summary
The mega auction for the 2022 IPL series will take place next January. This time the 2 new teams are planning to bang with the best players. The newly arrived Lucknow team has given a shock to all the IPL teams in this situation.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X